வயிற்றின் மேல்புற வலி பித்தப்பை கற்களால் கூட இருக்கலாம்…

சிறுநீரகத்தில் கற்கள் இருப்பதை எல்லோரும் அறிவோம்.ஆனால் வயிற்றுள் இருக்கும் உறுப்பு பித்தப்பைக்குள்ளும் கற்கள் உருவாகும் என்பதையும் அதீத வலியை உண்டாக்கும் என்பதையும் அறிந்திருக்கிறோமா?

கல்லீரலில் உருவாகும் பித்தமானது பித்தப்பையில் தேக்கி வைக்கப்படும்.இவை பித்தக்குழாய் வழியாக சிறுகுடல் சென்று உணவு செரிமானத்துக்கு உதவுகின்றது. உணவில் உள்ள கொழுப்புச்சத்தை கிரகித்துக்கொள்ள பித்தப்பை தேவைப்படுகிறது. பித்தமானது கழிவுப் பொருள்கள், பித்த தாது உப்புக்கள், வேண்டாத கொழுப்புகளை வெளியேற்ற உதவுகிறது.பித்தப்பை சிறிய பை போன்ற உறுப்பு.

இந்தக் கொழுப்புச்சத்து, தாது உப்புக்களை கரைச்சல் வடிவத்தில் வைக்க தோல்வி அடையும் போது கல் உருவாகிறது. பித்தப்பையில் அதிகமாக இருப்பது கொழுப்பு கட்டிகள் தான் என்றும் எஞ்சியிருப்பவை நிறக்கற்கள் என்றும் மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள். மருத்துவத்துறையில் புள்ளிவிவரப்படி 15% மக்களுக்கு இந்தப் பிரச்னை இருக்கிறது. சிறுநீரகக் கற்கள் பிரச்னைக்கு அடுத்தப்படியாக இந்த பித்தப்பை கற்கள் பிரச்னைதான் மக்களை பெருமளவில் பாதிப்புக்குள்ளாக்குகிறது.

பித்தப்பைகற்கள் மிளகு அளவிலும் சற்று பெரியதாகஇருந்தால் புளியங்கொட்டை அளவிலும் காணப்படும்.வெகுசிலருக்கு பித்தப்பை முழுவதும் கல் நிரம்பி இருக்க கூடும். கற்களின் தன்மையும் சில மிருதுவாகவும், சில கற்கள் கனமாகவும், கெட்டியாகவும் இருக்கக் கூடும். இதில் கவனிக்கவேண்டியது ஆண்களை விட பெண்களுக்கே பித்தப்பையில் கற்கள் இருக் கும் பிரச்னை அதிகமாக இருப்பதுதான்.

ஆரம்பத்தில் பித்தப்பையில் இருக்கும் கற்கள் எந்தவிதமான வலியையும் உண்டாக்கிவிடாது.சிலருக்கு வெகு காலம் வரை யிலும்கூட எந்தவிதமான அறிகுறியையும்,வலியையும் உண்டாக்கிவிடாது என்றாலும் தொடர்ந்து ஏப்பமும், உணவு உண்ட பிறகு வயிறு கனமாகவும் இருக்கும். பிறகு வாந்தி அல்லது ஏப்பத்துக்குப் பிறகு வலி குறையும்.

பித்தப்பையில் உள்ள கற்கள் சிறுகுடலுக்கு வந்து நிற்கும் போது வலியின் தீவிரம் அதிகமாக இருக்கும். அதே நேரத்தில் கற்கள் மீண்டும் பித்தப்பைக்குள் பொருந்தும் போது வலியின் தீவிரம் மட்டுமல்லாமல் வலியும் குறையத்தொடங்கும். வலியில்லாமல் இருக்கும் பித்தப்பை கற்களை அகற்றாவிட்டால் மஞ்சள் காமாலை,துர்நாற்றத்துடன் மலம் வெளியேறும்.

Sharing is caring!