வயிற்றெரிச்சலை போக்கும் அற்புத பானம்

உடலில் நீர்ச்சத்தை அதிகரிக்க கூடிய உடல் வெப்பத்தை குறைக்க கூடிய பானங்களை கோடை காலங்களில் கண்டிப்பாக எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும் இந்த காலங்களில், நாம் உட்கொள்ளும் உணவுகள் சரியாக ஜீரணம் ஆகாமல் வயிற்றில் சில உபாதைகளையும், அமில மாற்றங்களையும் ஏற்படுத்தும்.  இத்தைகைய பிரச்சனைகளை களையக்கூடிய வட இந்திய பானத்தைப் பற்றி தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.

வட இந்திய விழாக்களில் இடம் பிடிக்கும் இந்த பானத்தின் பெயர் தண்டை.  இதனை  பாதாம் , பிஸ்தா போன்ற ஊட்டச்சத்து மிக்க பருப்பு வகைகளைக் கொண்டு தயாரிக்கின்றனர். மேலும் தண்டை வயிற்றில் ஏற்படும் அமில பிரச்சனைகள் மற்றும்  உடலில் ஏற்படும் வீக்கத்திற்கு சிறந்த தீர்வாகவும் அமைவதாகக் கூறப்படுகிறது.

இந்த பானத்தை தயாரிக்க தேவையான  பொருட்கள் 

 பால்                      – 1/2 லிட்டர்
சர்க்கரை              –  (சுவைக்கேற்ப)
குங்குமப்பூ          – சிறிது
ரோஸ் எசன்ஸ் – 2 ட்ராப்

பேஸ்ட் செய்ய தேவையான பொருட்கள்
பாதாம்                  –    20
கசகசா                  –    1 டீஸ்பூன்
சோம்பு                  –    1 டீஸ்பூன்
ஏலக்காய் பொடி- 1/4 டீஸ்பூன்
மிளகு                      -10

தண்டை தயார் செய்யும் முறை

முதலில் பாலை கொதிக்க வைத்து, குளிரவிட வேண்டும்.  பின்னர் பேஸ்ட் செய்ய தேவையான பொருட்களை 30   நிமிடம் நீரில் ஊறவைத்து,  மிக்ஸியில் அரைத்துபேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். அதனையடுத்து குங்குமப்பூவை பாலில் ஊரவைக்க வேண்டும்.

அரைத்து வைத்துள்ள பேஸ்டை 15 நிமிடம் காய்ச்சிய பாலில் கரைத்து ஊற வைத்து வடிகட்டிக்கொள்ள வேண்டும்.  பின்னர் அதில் குங்குமப்பூ கலந்த பால், மற்றும்  2  ட்ராப் ரோஸ் எசன்ஸை கலந்து குளிர வைத்து 1 மணி நேரம் கழித்து  பரிமாற வேண்டும்.

இந்த “தண்டை” பானத்தை அவ்வப்போது பருகுவதன் மூலம் உப்புசம் மற்றும் அமிலம் அதிகரிப்பதன் காரணமாக ஏற்படும் வயிற்றெரிச்சலைக் கட்டுப்படுத்த முடியும் எனக் கூறப்படுகிறது.

Sharing is caring!