வரமே கொடுக்காத கடவுள் யார் தெரியுமா?

கடுந்தவம் புரிந்தாலும் வரமே கொடுக்காத கடவுள் யார் தெரியுமா?  இறைவனை நினைத்து கடுந்தவம் இருந்தால் போதும் கேட்டது அனைத்தும் கிடைத்துவிடும் என்று நினைத்த அசுரர்கள் நினைத்தப்படியே வரங்களை பெற்று மகிழ்ந்தார்கள். ஆனால் அவர்களுக்கு வரங்களை அளித்த கடவுள்கள் பிரம்மா வும், அகிலத்தை ஆளும் சர்வேஸ்வரனும் தான். புராணக்கதைகளில் கூட விஷ்ணுபகவான் அசுரனுக்கு  வரம் அளித்ததாக   தகவல் இல்லை.

பக்தனது தவத்தில் மெச்சி வரமளிக்கும் கடவுள்களாக பிரம்மாவும் சிவனும் இருந்தார்கள்.ஆனால் விஷ்ணுபகவான் பக்தர்களின் தவத்துக்கு செவி சாய்க்க மாட்டார் என்பதே உண்மை. காரணம் படைக்கும் கடவுள் பிரம்மனையும், அழிக்கும் கடவுள் சிவனையும் விட  காக்கும் கடவுளான விஷ்ணு வரம் பெற் றவர்களுக்கு உரியதை மட்டுமே வழங்குவார். எத்தகைய கடுந்தவமும் விஷ்ணு வின் மனதை மாற்றிவிட முடியாது. நமது தேவைக்கு அதை பெறுவதற்கு உரிய  தகுதி இருந்தால் மட்டுமே அவரிடமிருந்து அடைய முடியும்.

முந்தைய பிறவியில் செய்த கர்மாக்கள் நம்மை பின் தொடரும் போது விஷ்ணு பகவான் அதை சீர் செய்வதிலோ,  நிவர்த்தி செய்வதிலோ  அருள் பொழிய மாட்டார். ஒவ்வொருவரும் தங்களுடைய கர்மாக்களை அனுபவித்தே தீர வேண் டும். மஹாவிஷ்ணு கண்ணனாக அவதாரம் எடுத்த போது கூட பாண்டவர்களோடு இருந்தார். ஆனால் அவர் நினைத்திருந்தால் ஒரு நொடியில் அவர்களது துயரை தீர்த்திருக்கலாம். ஆனாலும் அவர்களுடைய கர்மாக்களை அவர்கள் பட்டு தான் தீர்க்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.

அடுத்து என்ன நடக்கும் என்பதை முன்கூட்டியே  அறிந்துகொள்ளும் பகவானாக அவர் இருந்த போதும் கூட அபிமன்யூ கொல்லப்படுவதையும், இளம் பாண்டவர்கள் மாண்டு போவதையும் தடுத்து நிறுத்தாமல் விதியின் போக்கி லேயே  விட்டார். 24 மணி நேரமும் விஷ்ணுவின் பாதத்தைப் பற்றினாலும் நமது கர்மாக்களை நாம்தான் அனுபவித்துதான் தீர்க்க வேண்டும். விதிப்படியே எல் லாம். கர்மாதான்  முக்கியம்  என்றால் எதற்கு கடவுளை சரணடைய வேண்டும் என்று கேட்கலாம்?

இதுவரை கர்மாவால் நடந்தது. இனி நடப்பதும் கர்மாவால்தான் நடக்கும். ஆனால் இயன்றவரை தீவிர ஆபத்துகள் ஏற்படாமல்  தற்காத்து கொள்ளலாம். எத்தனை பிறவி எடுத்தாலும் ஒருவர் முற்பிறவியில் செய்த கர்மாக்களை அனுபவித்தே தீர வேண்டும். கர்மாக்கள் தீரும் வரை பிறவி எடுத்தே ஆக வேண்டும். அதனால் தான்  நம்மை வழிநடத்தும் இறைவனிடம்  கர்மாக்களின் தீவிரத்தைக் குறைக்க  வேண்டி மன்றாடுகிறோம்.  போதும் இப்பிறவி மீண்டும் இப்பிறவி வேண்டாம் என்று விரதமிருக்கிறோம். இவை எல்லாமே  மறு பிறவியில் உங்களுக்கு புண்ணியத்தைக் கொடுக்கும் என்றாலும் உங்கள் கர்மாக்களை நீங்கள் தான் சுமக்க வேண்டும் என்ற கொள்கையிலிருந்து மட்டும் விஷ்ணு பகவான் பின்வாங்குவதே இல்லை.

இயன்றவரை உதவிடுவோம். இயலாத நிலையில் உபத்திரவம் செய்யாமல் இருப்போம்..

Sharing is caring!