வல்லாரை உண்டோரிடம் மல்லாடாதே….ஏன் தெரியுமா?

“வல்லாரை உண்டோரிடம் மல்லாடாதே’ என்பது பழமொழி. பழமொழிக்கேற்ப அதற்க்குண்டான மருத்துவக் குணங்களும் மிக அதிகம் அதில் சிலவற்றை பற்றி பார்ப்போம்!!!
.
மனநோய்க்கு மா மருந்து என்னவென்றால் அது வல்லாரை தான் என்பது தமிழ் சித்தர்களின் மருத்துவ குறிப்புகளில் இருந்து நாம் அறியலாம்.
.
வல்லாரை சாப்பிட சரஸ்வதி நம்மில் வந்துக் குடியெறுவாள் என்பது கிணங்க படிப்பில் நாட்டம் இல்லாதவர்கள் கூட படிக்கும் ஆர்வத்தை தூண்டக்கூடியது இந்த வல்லாரை. இதனால் நினைவாற்றலும் அறிவுக்கூர்மையும் மேம்படும்.
.
தோல் வியாதி உள்ளவர்களுக்கு வல்லாரை மிக சிறந்த மருந்து. இக் கீரையை வாரம் இருமுறை சாப்பிட்டு வர தோல் சம்பந்தமான வியாதி குறையும்.
.
வல்லாரையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, வைட்டமின் ‘எ’, வைட்டமின் ‘சி’ மற்றும் தாதுஉப்புக்கள் நிறைந்து காணபடுகின்றது. இது இரத்தத்திற்க்கு தேவையான அனைத்து சத்துக்களையும் சரிவிகித அளவில் கொண்டுள்ளது.
.
காய்ச்சல், உடற்சோர்வு, பல் சம்பந்தபட்ட நோய்கள் குணப்டுத்தும் ஆற்றல் உடையது.பற்களின் மஞ்சள் தன்மையை நீக்கவல்லது.
.
வல்லாரை கீரை ரத்த சோகையைப் போக்கி ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.
.
வல்லாரை கீரையை பச்சையாக சாப்பிடுவதால் மூளை சுறுசுறுபடையும்.
.
மாலைக்கண் நோய் குணமாக வல்லாரை கீரையோடு பசும்பால் சேர்த்து உண்டு வர மாலைக்கண் நோய் மறையும்.
.
ஞாபகசக்தியை வளர்க்கும் வல்லமை கொண்டது.வல்லாரை சாப்பிடுவதால் ஞாபகசக்தி பெருகும். புத்தி கூர்மையாகும்.
.

நீரிழிவு நோயாளிகள் வல்லாரைக் கீரை உண்பது நல்லது. இக்கீரை மலச் சிக்கலைப் போக்கி, வயிற்றுப் புண், குடல்புண்ணை ஆற்றுகிறது.
.

Sharing is caring!