வளமான வாழ்விற்கு நித்யக்லினா வழிபாடு….

வணங்குவோர் வாழ்வில் வளம் சேர்ப்பாள் நித்யக்லின்னா
இதயம் முழுக்க கருணையே உருவானவள்  திதி நித்யா தேவியான நித்யக்லின்னா.  நித்யக்லின்னா என்றால் எப்போதும் தயையுடன் இருப்பவள் என்று பொருள். இவள் மதலாஸா என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறாள்.. இதயம் முழுதும் கருணையால் நிறைந்திருக்கும் இவளை வழிபட்டால் மூவுலகிலும் புக்தி முக்தியோடு  வாழ்வார்கள் என்பது ஐதிகம். கருடப்புரா ணத்தில் நித்யக்லின்னா மதோவஷயே த்ரிபுரம் புக்தி முக்திதாம் என்று சொல்லப்பட்டுள்ளது. இவளை வணங்கினால் குடும்பத்தில் சச்சரவுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். மனக் கசப்புகள் தீரும். வணங்குவோர் வாழ்வில் வளம் சேர்ப்பாள் நித்யக்லின்னா.

நீங்கள் பிறந்ததேதிக்கு உரிய திதி நித்யாதேவியை அந்த திதி நாளில் ஸ்ரீ லலிதாம்பிகையுடன் ஸ்ரீ சக்கரம் வைத்து இந்த மூலமந்திரத்தை ஒரு வருடம் சொல்லி வந்தால் திதி சூனியத்தை நீக்கி வாழ்வில் வெற்றி மேல் வெற்றி வந்து சேரும். நீங்கள்  த்ருதியை திதியில் பிறந்திருந்தால் உங்களுக்குரிய திதி நித்யா தேவி நித்யல்லின்னா. சுக்லபக்ஷ  த்ருதியையிலும், கிருஷ்ண பட்ச திரயோதசி அன்றும் வீட்டில் விளக்கேற்றி நித்யக்லின்னாவை வழிபடுங்கள்.


நித்யக்லின்னா: திதி நித்யா தேவிகளின் மூன்றாம் இடத்தை அலங்கரிக்கும் கருணை மிக்க அழகு தேவதை நித்யக்லின்னா.சிவந்த நிறமும் சிவந்திருக்கும் கரங்களையும் கொண்டவள். பாசம்,அங்குசம்,பானபாத்திரம், அபய முத்திரை தரித்து நான்கு திருக்கரங்களை உடையவள். திருமுடியில் பிறைச்சந்திரனும், நெற்றியில் வியர்வைத் துளிகளும் கொண்டு முக்கண்களோடு புன்னகையுடன் தரிசனம் தருபவள்.. சர்வ அலங்காரங்களுடன் அழகுற திகழும் இவளுக்கு அணிகலன்களும் அழகு சேர்க்கும் பேறை பெற்றுள்ளன.

மூலமந்திரம்:
ஓம் நித்யக்லின்னாயை  வித்மஹே
நித்ய மதத்ரவாய தீமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்…

Sharing is caring!