வாசனைப்பிரியர்

உஷ்ணம் தலைக்கேறி விட்டால் பித்து பிடித்து விட்டது என்பர். சிவனும் ஒரு பித்தனைப் போல புலித்தோல் ஆடை, பாம்பு ஆபரணம் சூடி இருப்பதால் சுந்தரர், “பித்தா பிறை சூடி’ என்று தேவாரப்பாடலில் குறிப்பிடுகிறார். உஷ்ண தேகம் கொண்டவர் என்பதால் சிவனைக் குளிர்விக்க அபிஷேகம் செய்வர். அபிஷேகப்பிரியர் என்று அவரைக் குறிப்பிடுவர். ஆனால், அமிர்தம் கலந்த மண்ணால் ஆன கும்பகோணம் கும்பேஸ்வரர், அமிர்தம் போல குளிர்ச்சி மிக்கவராக இருப்பதால் இவருக்கு அபிஷேகம் நடப்பதில்லை. பவுர்ணமியன்று மட்டும் புனுகுச்சட்டம் சாத்தி வழிபடுவர். புனுகுவின் நறுமணம் கும்பேஸ்வரருக்கு மிகவும் பிடிக்கும்.

Sharing is caring!