வாடகை வீட்டிற்கு வாஸ்து அவசியமா?

அக்னி மூலையில்தான் சமையலறை இருக்க வேண்டும். காற்றோட்டம் பொருந்திய  இடத்தில் தான் படுக்கையறை வைக்க வேண்டும். ஈசானிய மூலையில் பூஜையறை, குபேர  மூலையில் தான்  பணப்பெட்டியை வைக்க வேண்டும் இதெல்லாம் சரிதான். ஆனால்  வாடகை வீட்டில் என்ன வாஸ்து பார்க்க வேண்டியிருக்கிறது? என்று கேட்பவர்களுக்குத்தான் இந்தக் கட்டுரை.

வேதங்கள் நான்கு என்பதை அறிவோம். அவற்றில்  அதர்வண வேதத்தில்  ஸ்தாபத்திய வேதத்தில் வாஸ்து சில்ப சாஸ்திரம் என்ற தலைப்பில் கட்டடங்கள் கட்டுவதைப் பற்றிய கருத்துகள் இடம்பெற்றுள்ளன. அறிவியல் தொடர்பான இக்கருத்தில் வாஸ்துவை முறையாக பின்பற்றி கட்டடப்படும் கட்டடத்தில் வாழும் ஒருவன்.. அளவற்ற செல்வத்தையும்,  தனக்கு பிந்தையை தனது சந்ததியினரையும்,  வாழ்க்கையில் இன்பங்களையும், அளவற்கரிய  அனைத்துப் பேறுகளையும் பெற்று இறுதிவரை இன்பமாக வாழுவான் என்று சொல்கிறது.

சரி வாஸ்து என்றால் என்ன? வாஸ்து என்பது புவியியல் சார்ந்த விஞ்ஞானம் என்றே சொல்லலாம். அப்படியாயின் வாஸ்து பார்க்கும் முறையானது பூமி முழுவதும் ஒரே போன்று இருக்காது.  பஞ்சபூதங்களான நிலம், நீர்,நெருப்பு, காற்று, ஆகாயம்த்தில் நமக்கு சாத்தியமான நிலம், நீர், நெருப்பு மூன்றையும் சரிவிகிதத்தில்  ஆன சேர்க்கைதான் வாஸ்து என்று அழைக்கப்படுகிறது. எனவே நமக்கு சாத்தியமான பஞ்ச பூதங்களில் மூன்றையும் சேர்த்து தான் கட்டடங்களை அமைக்க வேண்டும். வாஸ்து என்றால் பொருள்களையும், வஸ்து என்றால்  இடங்களையும்  குறிக்கும். பொருள்களுக்கு ஏற்றப்படி இடங்களை அமைத்தால் வளமோடு வாழ்வார்கள் என்பதே வாஸ்து சாஸ்திரம் என்று சொல்லப்படுகிறது. அதனால் தான் வாஸ்து சாஸ்திரமானது ஊருக்கு ஊர் மாறுபடுகிறது. இதை முதலில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.

சென்னையில்  கடலின் நீரோட்டம் கிழக்கு நோக்கி இருப்பதால் இதைப் பொறுத்து தான் வாஸ்து சாஸ்திரம் பார்க்க வேண்டும். இதுவே மகாராஷ்டிரா மாநிலமாக இருந்தால் அங்கு கடலின் நீரோட்டம் மேற்கு திசையை நோக்கி இருக்கும் என்பதால் அதற்கேற்ப வாஸ்து பார்க்க வேண்டும். வாஸ்து என்பது பொதுவானது கிடையாது. நாம் வாஸ்து பார்க்கும் இடத்தின் அமைப்பும், அங்கு பாயும் நீரின் ஓட்டமும் அறிந்து  கட்டடம் கட்டுவதோ, வாங்குவதோ நல்லது.

பஞ்சபூதங்களின் இருப்பு மாறி அமைந்து விட்டால் வீட்டில் எப்படி செல்வமும், செழிப்பும் இருக்கும்?. வீட்டில் தொடர்ந்து ஒரு பிரச்னை தீர்ந்து அடுத்த பிரச்னை வருவதும், தொழிலில் அடுத்தடுத்து தோல்வியும் நஷ்டமும் வருவதும் வாஸ்து குறைப்பாட்டால் தான். என்னதான் வாஸ்து குறைப்பாட்டுக்கு வழிபாடுகளைச் செய்தாலும் அவையெல்லாம் நூறுசதவீதம்  கைகொடுக்குமா என்று சொல்லமுடியாது.  அதே நேரம் அவை நிரந்தரமான தீர்வும் கிடையாது என்பதே உண்மை.

வாடகை வீட்டில் எப்படி வாஸ்துபார்ப்பது என்று நினைக்காதீர்கள். நீங்கள் குடியிருக்கும் வீட்டினால்  ஏற்படும்  நன்மை, தீமைகள் அனைத்தும் வீட்டின் உரிமையாளருக்கு இல்லை. அங்கு குடியிருக்கும் உங்களுக்குத்தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.வீட்டில் அமைதி இருந்தாலே அங்கு எல்லா வளமும் கிடைக்கும்.  குடிசை முதல் கோயில் கோபுரம் வரை அனைத்துமே பஞ்சபூதங்களை அடிப்படையாக வைத்து அவற்றுக்கு இணக்கமான முறையில் கட்டடங்களை கட்டும்போது, நீங்கள் எதிர்பார்த்த மகிழ்ச்சி நிச்சயம் உங்களுக்கு கிடைக்கும்.  உங்களைச் சுற்றி எப்போதும் சுகமும் நிம்மதியும் சூழ்ந்திருக்கும்.  நமது முன்னோர்கள் விஞ்ஞானத்தை முன்னறிந்து அதை அனைவரும் தவறில்லாமல் கடைப்பிடிக்கவே ஓர் இறைசக்தியை அவற்றுக்குள் கொண்டுவந்து நம்மை வணங்க வைத்திருக்கிறார்கள்.  அந்த வகையில் வாஸ்துவுக்கான தெய்வாமாக நாம் வணங்கும் வாஸ்து புருஷன் ஸ்ரீமந் நாராயணனின் அம்சம். இந்த பூலோகம் அவரது பூவுடலே என்பதால்  நாம் கட்டப்படும்  கட்டடங்கள் அனைத்தும் அவரது அனுமதி பெற்று செய்யவேண்டுமென்றூ வாஸ்துசாஸ்திரங்கள் கூறுகின்றன. வாஸ்துபகவானை வணங்கி  எல்லா வளமும் பெறுவோம்.

Sharing is caring!