வாய் துர்நாற்றத்தை போக்க வேண்டுமா ??

பொதுவாக அனைவரும் அடிக்கடி சந்திக்கு பிரச்சனைகளில் ஒன்று தான் வாய் துர்நாற்றம்.

இது வயிற்றுக் கோளாறு உள்ளவர்கள் நிச்சயம் இந்த வாய் துர்நாற்றம் ஏற்படும். அதாவது அல்சர் நோய் உள்ளவர்கள் வாய் துர்நாற்றத்தால் அவதிப்படுவதுண்டு

அதுமட்டுமின்றி புகையிலை, வெற்றிலை, பாக்கு போடுதல், உடலில் நீர்ச்சத்து குறைபாடு கூட வாய் துர்நாற்றம் ஏற்படுவதுண்டு.

இதனால் அருகில் உள்ளவர்களிடம் பேச கூட தயங்குவண்டு.

அந்தவகையில் இதிலிருந்து விடுபட கீழ் குறிப்பிடப்பட்டுள்ள இயற்கை முறைகளை பின்பற்றினாலே போதும். தற்போது அவற்றை பார்ப்போம்.

  • ஒவ்வொரு முறையும் உணவு சாப்பிட்டவுடன் சிறிதளவு சோம்பை வாயில் போட்டு மெல்லுவதால் வாய் துர்நாற்றம் கட்டுப்படும். அல்லது சோம்பு டீயும் பருகலாம்.
  • தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் 1 ஸ்பூன் வெந்தயத்தை சேர்த்து , பின் வடிகட்டி பருகவும். ஒரு நாளைக்கு ஒரு முறை இதனை செய்யலாம்.
  • தினசரி உணவிற்கு பிறகு 2 துண்டு கிராம்பு உட்கொள்வதால் வாயில் வீசும் துர்நாற்றம் முற்றிலும் ஒழியும். கிராம்பு போட்டு தயார் செய்யப்பட்ட டீயும் நல்ல பலனை தரும். அதோடு பல் மற்றும் ஈறுகளில் உண்டாகும் வலியும் போய்விடும்.
  • ஒரு டம்ளர் நீரில் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறை கலந்து, அந்த நீரால் வாயை கொப்பளித்து வரலாம். இதனால் வாய் துர்நாற்றம் கட்டுப்படும். தினமும் இரவு தூங்கும் முன்னும் காலையில் பல் துலக்கிய பின்னும் இதை செய்யலாம்.
  • தினமும் காலையில் ஒரு கிளாஸ் தண்ணீரில் சிறிதளவு ஆப்பிள் சிடர் வினிகர் சேர்த்து கலந்து கொப்பளித்து வருவதால் விரைவில் வாய் துர்நாற்றம் மறையும்.
  • ஒரு கிண்ணத்தில் நீரை விட்டு நன்றாக கொதித்ததும் சிறிதளவு லவங்க பட்டை தூளை சேர்க்கவும். இதனுடன் சிறிது பிரிஞ்சி இலை மற்றும் ஏலக்காயைச் சேர்க்கவும். நன்றாக கொதித்தவுடன் அந்த நீரை வடிகட்டி அடிக்கடி வாயை கொப்பளிக்கவும்.
  • ஒரு கிளாஸ் நீரில் சில துளிகள் டீ ட்ரீ எண்ணெய், புதினா எண்ணெய் மற்றும் எலுமிச்சை எண்ணெய் சேர்த்து கலந்து . அதனை பயன்படுத்தி அடிக்கடி வாய் கொப்பளிக்கலாம்.
  • கொத்தமல்லி இலைகளை சிறிதளவு வாயில் போட்டு மெல்லலாம். ஏனெனில் கொத்தமல்லி இலையில் இருக்கும் பச்சையம் (க்ளோரோபில்கள்) மிகச் சிறந்த கிருமிநாசினியாக செயல்பட்டு வாய் துர்நாற்றத்தை அகற்றுகிறது.
  • வெதுவெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்து ஒவ்வொரு நாளும் காலையில் கொப்பளிக்கலாம்.

Sharing is caring!