வாரத்துல இண்டு நாள் கைப்பிடி அளவு இதை சாப்பிட்டால் தீராத கொடிய நோயும் தீருமாம்!

நேவி பீன்ஸ் இது கடற்படை பீன்ஸ் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. இதில் விட்டமின்கள், மினரல்கள் மற்றும் புரோட்டீன்கள் அடங்கியுள்ளன.

இந்த பீன்ஸில் போலேட் அதிகமாக இருப்பதால் நியூரோ ட்ரான்ஸ்மிட்டர்கள் நினைவாற்றலை கடத்த உதவுகிறது.

அதே மாதிரி அனிமியா, நரம்புக் குழாய் குறைபாடு, நரம்பு சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கிறது.

இதனை தொடர்ந்து சாப்பிட்டால் என்ன என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை அறிந்து கொள்ள தொடர்ந்தும் படியுங்கள்.

புற்றுநோய்
இந்த நேவி பீன்ஸில் உள்ள ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நாள்பட்ட நோய்களை எல்லாம் தீர்க்க வல்லது.

எனவே இந்த பீன்ஸை உணவில் சேர்த்து வந்தால் மார்பக புற்று நோய், குடல் புற்றுநோய் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய் வராமல் தடுக்கிறது.

நீரிழிவு
இந்த நேவி பீன்ஸில் குறைந்த கிளைசெமிக் இன்டஸ் மற்றும் அதிக நார்ச்சத்துகள் உள்ளன. இது குளுக்கோஸ் அளவை கட்டுப்பாட்டில் வைத்து டயாபெட்டீஸ் நோய் வருவதை தடுக்கிறது.

எனவே டயாபெட்டீஸ் நோயாளிகள் இந்த பீன்ஸை சாப்பிட்டு வந்தால் அதன் வீரியத்தை குறைக்கலாம்.

இதய ஆரோக்கியம்
அதிக ஹச் டி எல் கொலஸ்ட்ரால் இருப்பதால் இதய நோய்கள் வருவது குறைக்கப்படுகிறது. அதிக அளவில் ஹீமோசைட்டஸின் உயரும் போது ஹார்ட் அட்டாக் வர வாய்ப்புள்ளது. நேவி பீன்ஸ் ஹச் டி எல் கொலஸ்ட்ரால் அளவை குறைத்து ஹீமோசைட்டஸின் அளவையும் குறைக்கிறது. மக்னீசியம் இரத்த குழாய்களை ரிலாக்ஸ் செய்து மன அழுத்தத்தை குறைக்கிறது. இதே மாதிரி இதய ஆரோக்கியத்திற்கும் துணை புரிகிறது.

மலச்சிக்கல்
நேவி பீன்ஸில் ஏராளமான நார்ச்சத்துகள் உள்ளன. இது சீரண சக்தியை மேம்படுத்துதல், மலச்சிக்கலை தடுத்தல் மற்றும் குடல் நோய்க்குறி போன்றவற்றை சரி செய்கிறது.இதிலுள்ள நார்ச்சத்துகள் வயிற்று போக்கு, அல்சர் போன்றவற்றை சரி செய்கிறது.

உடல் எடை இழப்பு
நேவி பீன்ஸில் உள்ள நார்ச்சத்துகள் மற்றும் கலோரிகள் உடல் எடையை இழக்க உதவுகிறது. நார்ச்சத்துகள் வயிறு நிரம்பிய தன்மையை கொடுக்கும். இதனால் நீங்கள் நொறுக்கு தீனிகள் சாப்பிடுவதை விடுத்து எளிதாக உடல் எடையை குறைத்து விடலாம்.

பக்க விளைவுகள்
ஒரு நாளைக்கு அதிக அளவில் எடுத்துக் கொள்ளும் போது வயிற்று வலி ஏற்படும்.
பச்சையாகவோ அல்லது நன்றாக சமைக்காத நேவி பீன்ஸ்களை எடுத்துக் கொள்ள வேண்டாம். இது நச்சாகும். மேலும் இப்படி சாப்பிடும் போது கால்சியம் உறிஞ்சுவதை தடைபடுத்தும்.
சிறுநீரக நோய் மற்றும் பலவீனமான சிறுநீரக உறுப்பு கொண்டவர்கள் இதை சாப்பிடக் கூடாது.

Sharing is caring!