வாழ்க்கையில் உச்சத்திற்கு செல்ல வேண்டுமா..? வெள்ளிக்கிழமைகளில் இப்படிச் செய்து வாருங்கள்….!!

பொதுவாக வெள்ளிக்கிழமை என்பது தெய்வத்திற்குரிய கிழமையாகவே இருக்கின்றது. வாரத்தின் மற்ற நாட்களில் பூஜை செய்யவில்லை என்றாலும் வெள்ளிக்கிழமையில் பலர் தங்களது வீடுகளில் பூஜை செய்வது வழக்கம். வெள்ளிக் கிழமைகளில் சில காரியங்களை செய்தால் அதிர்ஷ்டத்தை அதிகரிக்கலாம் என்பது ஐதீகம்.

கடைகளில் பெரும்பாலும் குபேர விளக்கு கிடைக்கிறது. வெள்ளிக்கிழமைகளில் தாமரை திரி வைத்து அதில் விளக்கேற்றி வந்தால் குபேர அருள் கிடைக்கும்.
வெள்ளிக் கிழமை சுக்கிர ஓலையில் தாமரை இதழ் கொண்டு மகாலட்சுமிக்கு அர்ச்சனை செய்து மந்திரம் கூறினால் செல்வம் பெருகும். வெள்ளிக் கிழமை மாலை வேளையில் வீட்டை சுத்தம் செய்து சாம்பிராணி புகையை வீடு முழுக்க பிடிப்பதால் வீட்டில் கெட்ட சக்திகள் இருந்தால் விலகி நேர்மறை ஆற்றலை அதிகரிக்க முடியும். லட்சுமிக்கு உகந்த வெள்ளிக்கிழமையன்று உப்பை நாம் வாங்கினால் நமக்கு இரட்டிப்பு பலன் கிடைப்பதோடு, நமது வீட்டிலும் லட்சுமி கடாட்சம் எப்போதும் நிறைந்து இருக்கும் என்பது நம்பிக்கை.

வெள்ளிக்கிழமைகளில் அரச மரத்தை 11 முறை சுற்றி வந்து அந்த மரத்தடியில் அமர்ந்து இருக்கும் விநாயகருக்கு 11 விளக்கு ஏற்றி வந்தால் பண வரவு அதிகரிக்கும்.
ஒருவர் வெள்ளிக்கிழமை விரதத்தை கடைபிடித்து வந்தால் லட்சுமி, முருகன், சுக்ரன் ஆகிய மூவரின் அருளையும் ஒருங்கே பெறலாம்.
வெள்ளிக்கிழமையில் விரதம் இருப்பது மிகவும் விசேஷமானது. தொடர்ந்து ஒருவர் வெள்ளிக்கிழமை விரதத்தை கடைப்பிடித்து வந்தால் லட்சுமி, முருகன், சுக்கிரன், ஆகிய மூவரின் அருளையும் ஒருங்கே பெறலாம்.

Sharing is caring!