வாழ்நாள் முழுவதும் ரத்த அழுத்தமே வராமல் இருக்கணுமா?

உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் இருக்கா? கவலைப்படாதீங்க மாத்திரையை இல்லாமல் அத குறைக்க முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள். உயர் இரத்த அழுத்தத்தை நிறுத்தும் உணவுகள் என்ற தலைப்பில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.

இதில் பழங்கள், காய்கறிகள் மற்றும் குறைந்த கொழுப்புள்ள உணவுகள் போன்றவை குறைந்த இரத்த அழுத்தத்தை குறைக்கிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த தகவல் 1997 ல் வெளியாகி உள்ளது. இந்த உணவுகள் இரத்த அழுத்தத்தை மட்டுமல்ல பக்க வாதம் மற்றும் இதய நோய்களைக் கூட சரி செய்யும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

ஆராய்ச்சி

ஆப்பிரிக்க மற்றும் அமெரிக்கர்களின் உயர் இரத்த அழுத்தத்தை குறைக்க இந்த உணவுகள் சிறந்ததாக இருப்பது தெரிய வந்துள்ளது.

குறைந்த சோடியம் Dash டயட் இரத்த அழுத்தத்தில் மிகப்பெரிய மாற்றத்தை உண்டு பண்ணுகிறது.

டயட் முறைகள்

லேசாக உயர் இரத்த அழுத்தம் கொண்டவர்கள் கூட இந்த DASH டயட்டை ப்லோ செய்து வந்தால் குறைந்து விடுமாம். இருப்பினும் நீங்கள் மருத்துவரிடம் இதை ஆலோசித்து இந்த டயட்டை ப்லோ செய்வது நல்லது.

அமெரிக்கர்கள் இந்த DASH டயட்டை ப்லோ செய்து வருவதால் அவர்களுக்கு இதய நோய்கள் மற்றும் பக்க வாதம் வருவது 15% மற்றும் 27% அளவு குறைந்துள்ளது என்று ஆராய்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு வருடமும் 225,000 மக்கள் இதய நோயாளும் 100,000 மக்கள் பக்க வாதம் போன்ற நோயாளும் பாதிப்படைகின்றனர்.

DASH டயட்

இந்த டயட்டில் பழங்கள், காய்கறிகள் மற்றும் குறைந்த பால் பொருட்கள், முழு தானியங்கள், மீன், கோழி இறைச்சி, பீன்ஸ் போன்ற உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். இதை பிரித்து சாப்பிடலாம்.

2-3 குறைந்த கொழுப்பு பால் பொருட்கள், 8-10 பழங்கள் மற்றும் காய்கறிகள் என்று தினமும் சாப்பிட்டு வரலாம். எனவே உயர் இரத்த அழுத்தம் இருப்பவர்கள் இந்த அளவில் உணவுகளை சாப்பிட்டு வந்தால் போதுமானது.

புரதங்கள்

இந்த டயட் முறையில் எந்த பொருள் உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது என்பது சரியாக தெரியவில்லை என்கிறார்கள் மருத்துவர்கள். ஆனால் இதில் அதிகளவு கால்சியம், பொட்டாசியம் மற்றும் மக்னீசியம், நார்ச்சத்து மற்றும் புரோட்டீன் போன்ற ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன.

இவைகள் இணைந்து உயர் இரத்த அழுத்தம் மற்றும் பக்க வாதம் வராமல் தடுக்கிறது. இதன் ஆரோக்கியமான கூறுகள் உங்களுக்கு உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது என்பது உறுதிப்பாடே.

Sharing is caring!