வாழ்வில் அனைத்து யோகங்களும் பெற்று வாழ்வாங்கு வாழ இந்த ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய வழிபாடு இது தானாம்..!

துலாம் ராசி கட்டங்களில் ஏழாவதாக வரும் ராசியாகும். இந்த ராசியின் அதிபதியாக சுக்கிர பகவான் இருக்கிறார்.அந்தவகையில் துலாம் ராசியில் பிறந்தவர்கள், தங்களின் மிகுதியான செல்வங்களையும், எண்ணற்ற அதிர்ஷ்டங்களையும், யோகங்களையும் பெறுவதற்கு கீழ் குறிப்பிடப்பட்டுள்ள பரிகாரத்தினை செய்தாலே போதும். தற்போது அந்த பரிகாரம் என்ன என்பதை பார்ப்போம்.

நவ கிரகங்களில் சுக்கிர பகவானின் ஆதிக்கத்திற்குள் வருகின்ற துலாம் ராசியினர் பரணி பூரம் பூராடம் ஆகிய நட்சத்திர தினங்களில் ஏதாவது ரங்கநாதர் கோவிலுக்கு சென்று ரங்கநாதரையும் தாயாரையும் அர்ச்சனை செய்து வழிபடலாம். வெள்ளிக்கிழமைகள் தோறும் வீட்டிலேயே சுக்கிர பகவானுக்கு விரதமிருந்து வழிபடுவதால் வாழ்வில் செல்வமும், சகல சுகபோகங்களும் பெருகும். திருமால் கோயிலில் பெருமாளுக்கு சாற்ற புனுகு சந்தனம், அத்தர் போன்ற வாசனைத் திரவியங்கள் தானம் செய்ததும் வாழ்வில் மங்களங்கள் உண்டாக்கச்செய்யும் ஒரு பரிகாரமாகும்.புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் விஷ்ணு சகஸ்ரநாமம் படித்து வருபவர்களுக்கு சுக்கிரபகவானின் அருள் முழுமையாகக் கிடைக்கும். பறவைகள், மீன்கள் மற்றும் இன்ன பிற ஜீவராசிகளுக்கு உணவும், நீரும் வைப்பது சுக்கிர பகவானின் அருளாசிகளை உங்களுக்கு முழுமையாக கிடைக்க செய்யும். உடன் பிறந்த சகோதரிகளுக்கு உங்களால் முடிந்த எந்த ஒரு அன்பளிப்பை கொடுப்பதும், உங்கள் வாழ்வில் ஏற்றம் தரும் சிறந்த பரிகாரமாக இருக்கின்றது.

Sharing is caring!