விசாகம் நட்சத்திரக்காரர்கள்….

27 நட்சத்திரங்களில் 11-வது இடத்தைப் பெற்றிருக்கும் விசாக நட்சத்திரம் முருகப்பெருமானின் அவதார நட்சத்திரம். இந்நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் முதல் மூன்று பாதங்கள் துலா ராசியிலும், நான்காம் பாதம் விருச்சிக ராசியிலும் அடக்கமாகும். ஐந்து நட்சத்திரங்களின் கூட்டத்தைக் கொண்டது விசாக நட்சத்திரம்.

விசாக நட்சத்திரத்தின் முதல் பாதத்தைக் கொண்டவர்கள் செவ்வாயை அதிபதியாக கொண்டிருப்பீர்கள். இயல்பிலேயே சுகத்தை விரும்புபவர்களாக இருப்பீர்கள். முன் கோபமும் சட்டென்று உணர்ச்சிபடும் குணமும் உங்களிடம் இருக்கும். துணிச்சலும் வெளிப்படையான பேச்சும் இருப்பதால் எப்போதும் உறவுகளும் நட்புகளும் புடைசூழ வாழ்வீர்கள். முடிவெடுத்த விஷயத்தைப் பற்றி உறுதியாக பற்றிக்கொள்ளும் பிடிவாத குணம் இயல்பிலேயே இருக்கும். வீண்விவாதங்கள், பிடிவாதம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். ஆனாலும் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு உரிய சுதந்திரம் கொடுத்து மகிழ்வீர்கள்.

விசாகம் நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தைக் கொண்டவர்களான நீங்கள் சுக்கிரனை அம்சமாக கொண்டிருப்பீர்கள். சுகபோக வாழ்க்கையை வாழ விரும்புவீர்கள். சுயநலம் கொண்டவர்களாக இருப்பீர்கள். தன்னம்பிக்கையுடன் தெளிவான முடிவை எடுப்பதில் வல்லவர் நீங்கள். அதர்ம வழியில் செல்லாமல் நேர்மையாக வாழவே விரும்புவீர்கள். பிறரை வசீகரிக்கும் தோற்றத்தைக் கொண்டு விளங்குவீர்கள். ஆடை, அணிகலன் மீது ஆர்வம் செலுத்துவீர்கள். செல்வாக்குடனும், புகழுடனும் வாழ விரும்புவீர்கள். உங்கள் கொள்கையை விட்டுக்கொடுக்காமல் கடும் உழைப்பாளியாகவும் இருப்பீர்கள்.

விசாகம் நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தைக் கொண்டவர்கள் புதனை அதிபதியாக கொண்டிருப்பீர்கள். கல்வியில் சிறந்து விளங்குவீர்கள். பட்டங்கள் வாங்கி மகிழ்வீர்கள். இறைபக்தியில் நம்பிக்கை உள்ளவர்களாக இருப்பீர்கள். வாழ்க்கையைத் திட்டமிட்டு வாழ்வீர்கள். உங்கள் அணுகுமுறை மற்றவர்களை மகிழ்ச்சிபடுத்துவதாக அமையும். எண்ணிய எண்ணங்களை நிறைவேற்றும் வரை ஓயமாட்டீர்கள். எதிரிகளிடமிருந்து தள்ளி நிற்கவே விரும்புவீர்கள்.

விசாகம் நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தைக்  கொண்டவர்களான நீங்கள் சந்திரனை அம்சமாக கொண்டிருப்பீர்கள். ஆடம்பர பொருளின் மீது மோகம் கொண்டிருப்பீர்கள். செலவுகளுக்கு அஞ்சமாட்டீர்கள். சமூகத்தில் கெளரவமாக வாழ்வீர்கள். புகழோடு வாழ விரும்புவீர்கள். உங்கள் பேச்சுத்திறமையால் சுற்றியிருப்பவரை கவர்ந்துவிடுவீர்கள். மனஉறுதி மிக்க நீங்கள் குடும்பத்தோடு மகிழ்ச்சியாக வாழ்வீர்கள்.

கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கும் நீங்கள் வாழ்க்கையைத் திட்டமிட்டு வாழ்வீர்கள். அழகு, ஆடம்பரத்தின் மீது மோகம் கொண்டிருப்பீர்கள். தர்ம சிந்தனையும் இறைநம்பிக்கையும் மோலோங்கி இருக்கும்.  உங்கள் பேச்சாற்றலால் நினைத்த காரியத்தை சாதித்து கொள்வீர்கள். இரக்கமும் கருணை குணமும் கொண்ட நீங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ விரும்புவீர்கள்.

Sharing is caring!