விஜய் சேதுபதி படத்தில் அஜித் பட ஹீரோயின் கம்பேக்

நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்புக்கு ரசிகர்கள் ஏராளம். ஆனால் இந்த வருடம் வந்த சங்கத்தமிழன் படம் பெரிய வசூல் குவிக்கவில்லை. இருப்பினும் அவர் தளபதி 64 உட்பட கிட்டத்தட்ட 10 படங்களில் தற்போது நடித்துவருகிறார்.

இந்நிலையில் தற்போது விஜய் சேதுபதி அடுத்து ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ என்ற படத்தில் நடிப்பதாக அறிவிப்பு வந்துள்ளது. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார்.

அது மட்டுமின்றி மேலும் ஒரு முக்கிய ரோலில் நடிகை கனிகா நடிக்கவுள்ளார். இவர் அஜித்தின் வரலாறு படத்தில் ஹீரோயினாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!