விநாயகரின் ஒடிந்த கொம்புக்கான காரணம் தெரியுமா உங்களுக்கு?

களிமண் விநாயகரை வழிபட்டால் நற்பதவி கிட்டும்.
புற்று மண்ணால் உருவாக்கப்பட்ட விநாயகரை வழிபட்டால், செல்வம் பெருகும்.
உப்பால் உருவாக்கப்பட்ட விநாயகரை வணங்கினால் ,எதிரிகளை.வெற்றி காணலாம்.
கல் விநாயகரை வழிபட்டால், சகல பாக்கியமும் கிட்டும்.

விநாயகருக்கு, ஒரு கொம்பு ஒடிந்ததற்கு புராணக்கதை அனைவருக்குமே தெரியும்.  வியாசர் சொல்லச்சொல்ல, மஹா  பாரதத்தை முதலில் எழுத்தாணி கொண்டுதான் எழுதினார். ஒரு கட்டத்தில் எழுத்தாணி தேய்ந்து விட்டது.

தன் பணியைத்  தடையில்லாமல் செய்ய, தனது  தந்தத்தை உடைத்து எழுத ஆரம்பித்தார். எல்லா மனிதர்களுக்குமே, ஒரு காரியத்தை செய்யும் போது,  தடை வருகிறது, எந்தத் தடையையும் கண்டு நீங்கள் மனம் தளர்ந்துவிடக்கூடாது.

என்ன வசதி இருக்கிறதோ அதைக்கொண்டு  காரியத்தை தொடர்ந்து நடத்தி வெற்றிபெற வேண்டும் என்பதையே உடைந்த கொம்பு எடுத்துக்காட்டுகிறது.

Sharing is caring!