விநாயகர் தத்துவம்….இவ்வளவு இருக்கிறதா?

விநாயகர் என்பதன் பொருள் நாதமும் விந்துவும்

விநாயகர் என்ற சொல்லுக்கு வி – இல்லாமை. நாயகன் – தலைவன். விநாயகர் – மேலான தலைவர்இ தனக்கு மேல் தலைவன் இல்லாதவர் என்று பொருள்.

ஓம் அநீஸ்வராய நம என்னும் மந்திரத்திற்கு – தனக்கு மேல் ஒரு ஈஸ்வரன் இல்லாதவர் என்பதே பொருள். ஸ்ரீ ஆதி சங்கரர் தாம் அருளிய கணேச பஞ்சரத்னத்துள் அநாயகைக நாயகம் என்று கணபதியைப் போற்றுகின்றார்.

அநாயக – ஏக – நாயகம். அதாவது தனக்கு மேலோரு நாயகரில்லாமல் தானே ஏக நாயகனாக இருப்பவர் என்பது இதன் பொருள். வழிபடுவோரின் விக்கினங்களை (இடையூறுகளை)ப் போக்குபவராதலின் இவருக்கு விக்னேஸ்வரன் என்றும் கணங்களுக்கு தலைவராயிருப்பதால் கணநாதன்இ கணபதி என்று அன்புடன் வணங்கப்படுகிறார்.

விநாயகர் வடிவத்தின் தத்துவம்,
விநாயகருடைய வடிவம் விந்தையானது. யானைத் தலையும்இ பெருவயிறும்இ மனித உடலும்இ ஐந்து திருக்கைகளும் கூடிய வடிவமும்இ இடையின் கீழே மனித உடம்பும்இ இடைக்குமேல் கழுத்துவரை தேவ உடம்பும். மேலே விலங்கின் தலை (யானைத்தலை) பூதப்பெருவயிறு. ஒரு பக்கம் கொம்பு – ஆண் தன்மைஇ மற்றொரு பக்கம் பெண் தண்மை. அஃறிணைஇ உயர்திணை அம்சங்கள் பொருந்திய இந்நிலையை உற்று நோக்கின் விநாயகப் பெருமான் – தேவராய்இ மனிதராய்இ பூதராய்இ விலங்காய்இ ஆணாய்இ பெண்ணாய்இ எல்லாமாய்த் திகழ்கிறார் என்பது புலனாகும்.

விநாயரின் ஐந்து திருக்கரங்கள்
விநாயகருக்கு ஐந்து திருக்கரங்கள் உள்ளன.
துதிக்கையில் அமிர்த குடம்,
பின் இரண்டு கைகளில் பாசம்இ அங்குசம்.முன் கைகளில் வலக்கையில் ஒடிந்த கொம்பு (தந்தம்).

இடக்கையில் மோதகம்

திருமூலர் ஐந்து கரத்தனைஇ ஆனை முகத்தனை எனக் கூறுகிறார். இவரது துதிக்கையில் குடம் இருக்கிறது. இக்குட நீரால் தாய்இ தந்தையரை நீராட்டி வழிபடுகிறார். தாய்இ தந்தையரிடம் இவருக்கு இருக்கும் பக்தி இதனால் நன்கு விளங்குகிறது. பின்னிரண்டு கைகளில் பாசம்இ அங்குசங்களை வைத்திருக்கிறார். யானையை அடக்க யானைப்பாகன் பாசாங்குசங்களை வைத்திருப்பான்.

விநாயகரோ அவற்றைத் தன் கைகளில் வைத்துக் கொண்டிருக்கிறார். ஒரு யானைப்பாகன் யானையை படுகுழிகளில் விழாமல் தடுத்து நேர்வழியில் நடத்துவது போல உயிர்களாகிய நாம் ஆசாபாசங்களாகிய படுகுழிகளில் விழாமல் தடுத்து நல்ல வழியில் நடத்தி நம்முடைய ஆசாபாசங்களை அவரது கையிலிருக்கும் பாசத்தால் கட்டி அங்குசத்தால் வெட்டிப் பாச நீக்கம் செய்து முக்திப்பேற்றை அருளுகிறார்.

முன் கைகளில் வலது கையில் ஒடிந்த கொம்பினை வைத்திருக்கிறார். இது கஜமுகாசுரனைக் கொன்று தேவர்களைக் காப்பாற்றியதன் அறிகுறியாகும். இடது கையில் மோதகத்தைத் தாங்கி இருக்கிறார். இது அமிர்த கலசம் என்றும் கூறுவர். மோதகத்தில் இவருக்கு விருப்பம் அதிகம். மோதகம் என்பதன் பொருள் அழிவற்ற தன்மை அல்லது நிஜாநந்தம் என்பது ஆகும்.

ஐந்து கரங்களில் ஒரு கையைத் தாய் தந்தையருக்கும்இ மற்றொருகையை தேவர்களின் நலத்தின் பொருட்டும்இ ஒரு கையைத் தன் பொருட்டும் ஆக்கிஇ இரு கைகளை ஆன்மாக்களாகிய நமக்கு உதவுதன் பொருட்டு வைத்து கொண்டிருக்கிறார். இக்கருத்தை பண்ணியம் ஏந்தும் கரம் தனக்காக்கிப் பானிலா மருப்பமர் திருக்கை விண்ணவர்க்கா க்கி அரதனக்கலச வியன்கரம் தந்தை தாய்க் காக்கிக் கண்ணிலாணவ வெங்கரி பிணித்தடக்கிக் கரிசினேற் கிருகையுமாக்கும்
அண்ணலைத் தணிகை வரைவளர் ஆபத்சகாயனை
அகந்தழீஇக் களிப்பாம் என்ற தணிகைப் புராணப் பாடல்களில் அறியலாம். விநாயருடைய உருவம் பல அரிய உண்மைகளை உணர்த்துகிறது.

முன்னே சொல்லியபடி அவர் ஆணல்லர் பெண்ணுமல்லர்இ திருநங்கையோ எனில் அதுவுமல்லர்இ யானைத்தலைஇ தேவ உடல் இவற்றைக் கொண்டிருப்பதால் இவர் மிருகமும் அல்லர்இ மனிதரும் அல்லர். தொந்தி வயிற்றோடும் சப்பைக் காலோடும் இருக்கிறார். இவற்றால் விநாயகர் நாம் காணும் எவ்வகை இனத்தையும் சாராதவர் என்று உணர்கிறோம்.

யானைக்கு மதஜலம் ஒழுகுவது போல் இவருக்கும் வலப்பக்கம் அறக்கருணையும்இ இடப்பக்கம் மறக்கருணையும் பொழிகிறது.

இதனை பரஞ்சோதி முனிவர் கருணை யென்னும் வெள்ளமதம் பொழி சித்தி வேழத்தை நினைத்து வரும்வினைகள் தீர்ப்பாம் என்று கூறுகிறார்.

சிவனுக்குப் பிள்ளையார்இ முருகர்இ வீரபத்திரர் என்று மூன்று குமாரர்கள் உண்டு. இவர்களில் விநாயகரே சிவனுடைய பிள்ளைகளில் முதன்மையானவர் என்பதைப் பிள்ளையார் என்ற சிறப்பு பெயரால் அறியலாம். பிள்ளையாரை வணங்குவதால் மும்மலங்கள் விலகும்இ திருமகள் வந்துறைவாள்இ இடையூறுகள் அகலும்இ இருள்வினை நீங்கும்.

விநாயகரே குருவாக வந்து அருள் புரிவார் என்பதனை அவ்வைப் பிராட்டியார் குருவடிவாகிக் குவலயந் தன்னில்இ திருவடி வைத்து எனக் கூறுவதால் அறியலாம். அவரே முக்தியும் தருபவர் என்பதை அவ்வைப் பிராட்டியாரின் இருத்தி முத்தி இனிதெனக் கருளி என்ற வாக்கியம் நமக்கு உணர்த்துகின்றது.

அவ்வைப் பிராட்டியாரை விநாயகப் பெருமான் தனது துதிக்கையால் தூக்கிக் கைலாசத்தில் சேர்த்தார் என்ற வரலாறும் இதனை வலியுறுத்துகின்றது.

பிரணவத்தின் வடிவம்
கணபதி திருவருவை வலது காது முதல் தொடங்கி தலையை சுற்றி வளைத்து இடது காது வரை கொண்டு வந்து தொங்கும் தும்பிக்கை வரை நீட்டிக்கொண்டு கழித்தால் ஓம் என்ற பிரணவ வடிவம் புலப்படும்.

சிவபெருமானிடத்திலிருந்து ஓம் எனும் நாதம் ஆதியில் பிறந்தது. ஓம் என்பதை பிரணவம் எனக் கூறுவர். ப்ர ூ நவ என்று பிரித்து என்றும் புதியது எனப் பொருள் கூறுவர். விநாயகர் பிரணவ வடிவனர். ஓம் பிரணவானன தேவாய நம என்பது அவரது மந்திரங்களில் ஒன்று. ஓம் எனும் பிரணவத்தின் வரி வடிவமே விநாயகர் வடிவம் அதன் ஒளி வடிவமே நாத விந்துவாகும். மேல்சுழி இருக்குமிடம் விநாயகரது ஒடிந்த கொம்பு இருக்குமிடம்.

அது அங்கிருந்து வலது கை வழியாக மேலேறிக் கிரீடத்தைச் சுற்றி இடக்கைப் பாசம்வரை வந்து வளைந்து நெற்றிப் பொட்டு வரையிலும் சென்று துதிக்கை வழியாகக் கீழ் இடக்கை வரை வந்து கால்வரை இறங்குகிறது. இடக்கையும் அதிலிருக்கும் மோதகமும் {0}ம் என்பதைக் குறிக்கிறது. ஆதலின் ஓம் எனும் வரி வடிவமே விநாயகரது வடிவமாகும்.

பிள்ளையார்சுழியின் பொருள்
பிள்ளையார்சுழி என்பது அகரம்இ உகரம்இ மகரம் (அஇ உஇ ம்) ஆகிய மூன்றையும் அடக்கியுள்ள நாதப்பிரமமாகிய ஓம் என்னும் பிரணவத்தின் ஆரம்ப வடிவம். அதில் உள்ள வட்ட வடிவம் சிவசக்தி பீடம். கோடு சிவலிங்கம் என்றும் சொல்லப்படும். எழுதத் தொடங்குமுன் பிள்ளையார் சுழியை எழுதுவதுஇ எழுத மேற்கொள்ளும் செயல் இடையூறின்றி முடிய ஸ்ரீ மஹா கணபதியை நிறுத்தி வழிபடுவதைப் போன்றதாகும்.

கணபதி வழிபாடு தத்துவம்
உயிர்களின் உடம்பில் உள்ள ஆறு ஆதரங்களில் மூலாதாரத்தில் சுருண்டு கிடக்கும் குண்டலினி சக்தியின் மூலக்கனலை எழுப்பி பிரம்மத்துடன் ஆக்ஞையில் ஒன்றிடச் செய்வது. (யானை – பிரணவ வடிவம்) பிள்ளையாரின் மூல வடிவம் ஓம். ஓம்கார வடிவம். ஓம் என்பது தெய்வீக ஒளிவடிவம். வாழ்க்கை என்பதே தெய்வீக ஒளிவடிவில் அடங்கும் விஷயம்தான் என்பதை அறிந்துகொள் என்ற அறிவுரை.

வாகனம் மூஷிகத்தின் தத்துவம்
ஆங்காரத்தின் வடிவமான பெருச்சாளி இருளை விரும்பும்; கேடு விளைவிக்கும்; கீழ்நோக்கும்; அஞ்ஞானம் (அறியாமை) ஆணவத்தின் அடையாளம். ஓங்கார வடிவான மேல்நோக்கும் மெய்ஞான வடிவமான பிள்ளையார் சிறிய பெருச்சாளியை தன் கால் கீழ் கொண்டு இருப்பது. அறியாமையையும்இ செருக்கையும் அடக்கி ஆள்பவர் என்பதையும் எல்லாவற்றிற்கும் ஆதாரமாகவும் தாங்குபவராகவும் விளங்குபவர் என்பதையும் காட்டுகிறது.

விநாயகப் பெருமானின் ஆயுதங்கள்
பாசம்இ அங்குசம்இ தந்தம்இ வேதாளம்இ சக்திஇ அம்புஇ வில்இ கத்திஇ கேடயம்இ சம்மட்டிஇ கதைஇ நாகபாசம்இ சூலம்இ குந்தாலிஇ மழுஇ கொடிஇ தண்டம்இ கமண்டலம்இ பரசுஇ கரும்பு வில்இ சங்கம்இ புஷ்ப பாணம்இ கோடாரிஇ அட்சரமாலைஇ சாமரம்இ கட்டுவங்கம்இ சக்கரம்இ தீ அகல்இ வீணை.

தோப்புக்கரணம்
தோப்புக்கரணம் என்பது குண்டலினி யோகத்தின் ஒரு அங்கமாகும். அந்தக்கரணமாகிய மனம்இ புத்திஇ சித்தம்இ அகங்காரம் என்ற நான்கும் புறக்கரணமாகிய கைஇ கால்இ கண் முதலியன தூண்டப்பட்டு மனித உடலில் அடிவயிற்றின் கீழ் ஓங்கார வடிவத்தில் அமைந்து இருக்கும் சுஷீம்னா நாடி ஒட்டி எழுப்பப்படுகிறது. (மூலாதார சக்தியை சகஸ்ர தளத்தில் பாய்ச்சுவது.)

தேவியோடு திகழும் கணபதி ரூபங்கள்
(பிரம்மாக்கு கமலைஇ வல்லி என இரு பெண்கள் தோன்றி விநாயகரை மணந்தனர் என்று ஒரு புராணம் உண்டு.)
 சக்தி கணபதிஇ
 மகா கணபதிஇ
 ஊர்த்துவ கணபதிஇ
 உத்தண்ட கணபதிஇ
 சங்கடஹர கணபதி.

விநாயகர் இருக்குமிடங்கள்
அரசமரம் – ஆகாயம்
வாதாராயண மரம் – வாயு
வன்னிமரம் – தேயு (அக்கினி)
நெல்லிமரம் – அப்பு (நீர்)
ஆலமரம் – பிருதிவி (மண்)

விநாயகருக்கு உகந்த பத்திரங்கள் (இலைகள்)
முல்லைப் பத்திரம், கரிசலாங்கண்ணி, வில்வம் பத்திரம், ஊமத்தை இலை, இலந்தை இலை, வெள்ளறுகம்பூல் வேருடன், வன்னி இலை, நாயுருவி பத்திரம், கண்டங்கத்தரி இலை, அரளி இலை, எருக்கு இலை, மருதை இலை, விஷ்ணுகிரந்தி இலை, மாதுள இலை, தேவதாரு இலை, மருவு பத்திரம், அரசு இலை, ஜாதி மல்லிகை இலை, தாழை இலை, அகத்திக் கீரை முதலியன.

கணபதி வழிபாட்டில் அர்ச்சனை செய்ய வேண்டிய இலைகளின் பலாபலன்கள்
மாவிலை – அறம்இ நீதி
கரிசாலங்கண்ணி – இல்வாழ்க்கைக்குத் தேவையான பொருள்
வில்வை – சுகம்
அறுகு – சகல பாக்கியம்
இலந்தை – கல்விஇ அறிவு
ஊமத்தை – பெருந்தன்மைக் குணம்
வன்னி – பல நன்மைகள்
நாயுருவி – வசீகரம்
கண்டங்கத்திரி – வீரம்
அரளி – வெற்றி
அரசு – உயர்பதவிஇ காரியவெற்றி
எருக்கு – வம்சவிருத்திஇ கருவில் உள்ள சிசுவிற்கு பாதுகாப்பு
மருதம் – புத்திரபாக்கியம்
துளசி – நுண்ணறிவு
மாதுளை – பெரும்புகழ்
தேவதாரு – இதய வலிமை
மரிக்கொழுந்து – இல்லறசுகம்
ஜாதிமல்லி – சொந்தவீடுஇ பூமிபாக்கியம்.
நெல்லி – செல்வச் செழிப்புஇ கடன் நிவர்த்தி
தவனம் – திருமணதடை நிவர்த்தி

விநாயகருக்குப் பிரியமான நிவேதனம்
சுண்டல்இ பொரிஇ கடலைஇ இளநீர்இ தேன்இ அப்பம்இ அதிரசம்இ முறுக்குஇ கரும்புஇ விளாம்பழம்இ கொழுக்கட்டைஇ மிளகு அன்னம்இ சக்கரைப் பொங்கல்இ வடைஇ அவல்இ நாட்டுச் சக்கரைஇ கற்கண்டுஇ பேரிச்சைஇ திராட்சை.

மோதகத்தின் தத்துவம்
மோதகத்தின் மேல் இருக்கும் மாவுப் பொருள்தான் இந்த அண்டம். உள்ளே இருக்கும் இனிப்புச் சுவையுள்ள பூரணம் தான் பிரம்மம். அதாவதுஇ நமக்குள் இருக்கும் இனிய குணங்களை மாயை மறைக்கிறது. அந்த மாயையை உடைத்தால்இ அதாவது மேலே உள்ள வெள்ளை நிற மாவுப் பொருளை உடைத்தால் உள்ளே உள்ள இனிய குணமான இனிப்புச் சுவையுள்ள பூரணம் நமக்கு கிடைக்கும்இ அதாவது இனிய குணம் வெளிப்படும் என்பதே அதன் தத்துவம்.

விநாயகரை வணங்கும் முறை
முதலில் வலக்கையால் முகத்துக்கு மேலாக இடப் பக்கத்திலும்இ இடக்கையால் வலப் பக்கத்திலும் தலையில் மூன்று முறை குட்டி. காதுகளைப் பிடித்துத் தோப்புக்கரணம் இட்டுக் கணபதியை வணங்க வேண்டும். உருண்டு திரண்ட நம் பாவங்கள் விநாயகர் அருளால் உடைத்து சிதறுவதாக நினைத்து தேங்காயை ஓங்கி அடித்துச் சிதற விட்டு நம் தீவினைகள் தொலைந்ததாக எண்ண வேண்டும்.

விநாயகர் முன் தலையில் மூன்று முறை குட்டிக்கொள்வதன் பொருள்
நமது தலையில் காதுக்கு அருகில் இருபக்கமும் அமிர்தம் இருக்கிறது. தலையில் நாம் மூன்று முறை குட்டி கொள்ளும்போது அந்த அமிர்தமானது நமது உடல் முழுவதும் பரவி குண்டலினியை எழுப்பி நமது உடலுக்கும் மனதுக்கும் உற்சாகத்தையும் கொடுக்க வல்லது. இது உண்மை என்று அறிவியல் ஒத்துக் கொண்டுள்ளது.

வலம்புரி இடம்புரி விநாயகர்
விநாயருடைய துதிக்கை வலப்புறமாக வளைந்திருப்பின் வலம்புரி விநாயகர். இடப்புறமாக வளைந்திருப்பின் இடம்புரி விநாயகர் என்றும் அழைக்கின்றோம். (வலம்புரியை விசேஷமாகக் கொள்வர்.)

கம்மென்று இருஇ காரியம் ஆகும். இது உலக வழக்கில் உள்ள ஒரு பழமொழி. சும்மா இருந்தால் காரியமாகிவிடும் என்பது பொருளன்று. கம் என்பது கணபதி மந்திரத்தின் மூல மந்திரமாகும் கணபதியைப் பற்றிக்கொள் – காரியம் கைகூடும் என்பதே இதன் பொருள்.

சங்கடஹர சதுர்த்தி
ஒவ்வொரு மாதத்திலும் பௌர்ணமி கழித்து நான்காம் நாள் சங்கடஹர சதுர்த்தி எனப்படும். இந்நாளில் விநாயகரை வழிபடின் எல்லாச் சங்கடங்களும் நிவர்த்தியாகும். இந்நாளில் இரவில் 9 மணிக்கு மேல் சந்திரனைப் பார்த்த பிறகே விநாயகர் வழிபாடு நடைபெறும். மாசிஇ ஆவணி மாதத்தில் வருவது மஹா சங்கடஹர சதுர்த்தி எனப்படும். அதுவும் செவ்வாய்க் கிழைமையில் பொருந்தி வருமாயின் மிகவும் விசேஷமாகும்.

அரசமர, வேப்பமர விநாயகரும், பிரதட்சணமும்
பிரதட்சணம் யார் வேண்டுமானாலும் செய்யலாம். ஸ்நானம் செய்து மடியாக ஆண்கள் பெண்கள் இருவரும் வீபூதி குங்குமம் இட்டுக்கொண்டு காலை 7 மணிக்குள் 5இ 7 அல்லது 11 தடவையாவது பிரதட்சணம் செய்ய வேண்டும். எள்இ வெல்லம் நிவேதனம் செய்யலாம். வெள்ளிஇ சனிக்கிழமைகளில் பிரதட்சணம் செய்வது மிகவும் விசேஷமாகும். காலை 8 மணிக்கு மேல் அரசமரத்தை வலம் வரக்கூடாது. தினமும் அரசமரத்தையும் அங்கு இருக்கும் விநாயகப் பெருமானையும் தீபம் ஏற்றி நீர் அபிஷேகம் செய்தல் நாகதோசம்இ புத்திரதோசம், தாரதோசம் போன்றவைகள் விலகும் என்பது திண்ணம்.

விநாயகருக்குரிய விரத நாட்கள்
வெள்ளிக்கிழமைஇ விநாயக சதுர்த்திஇ சங்கடஹர சதுர்த்தி.
ஓம் கம் கணபதயே நம
ஓம் – புத்திஇ முத்திஇ லோக வசியம்
கம் – க – இடையூறுகளை நீக்கும்
ண – விரும்பும் சித்திகளைத் தரும்
ப – விரும்பியன நிறைவேறலோடு காய்ச்சல் முதலிய நோய் நீக்கம்
த – வெற்றியைத் தரல்
யே – (ய்ூஏ) உச்சாடன பலத்தைத் தந்து சர்வார்த்த சித்தியோடு வசீகரத்தைத் தரும்.

நம – பாவ நாசமும் வெற்றியும்

இம் மகா கணபதி மந்திர ஜபம் சர்வ சித்தியைத் தருவதோடு இடையூறுகளையும் நோய்களையும் நீக்கி எவ்வகை மன விருப்பங்களையும் அனைத்து வசீகரத்தையும் வழங்கி முடிவில் முத்திப் பேற்றினையும் அளிக்க வல்லது எனும் பொருள் தருகிறது.

விநாயகரைத் தண்ணீரில் கரைப்பது ஏன்?
விநாயகர் சதுர்த்தி தினத்தில் விரதம் இருந்துஇ (மிருக்திகை) மண் கொண்டு செய்யப்பட்ட விநாயகருக்கு பூஜை செய்ய வேண்டும் என்று வேதத்தில் கூறப்பட்டுள்ளது. அந்த மண்ணில் புகழ்இ கீர்த்திஇ பாப நிவர்த்திஇ தேக புஷ்டி சர்வமும் கிடைப்பதாக வேதங்கள் கூறுகின்றன. விநாயகர் சதுர்த்தி தினத்தில் மட்டும் மிருக்திகை கொண்டுதான் விநாயகர் சிலைகளைச் செய்ய வேண்டும். மண்ணினால் செய்யப்பட்ட சிலைகள் நீண்டநாள் தாக்குப் பிடிக்காது. இதனால் பூஜை முடிந்த பிறகு நான்காவது நாளில் தண்ணீரில் கரைக்கலாம். தண்ணீரில் கரைப்பதால் மணல் தண்ணீரோடு கரைந்து விடுகிறது. விநாயகர் சிலையில் இருந்த மணல் மற்றவர் காலில் படாது. தோஷமும் நீங்கும் இதனால்தான் விநாயகர் சிலைகள் பஞ்ச பூதங்களில் ஒன்றான தண்ணீரிலோஇ கடலிலோஇ குளத்திலோஇ கிணற்றிலோ கரைக்கப்படுகிறது. விநாயகர் கரைக்கப்படுவதை வேதத்தில் அமிருத ஏவ ஸ்வர்கே லோகே ப்ரபித் விஸ்பதி என்று கூறப்படுகிறது.

விநாயகருடைய 16 வடிவங்களும், அமைப்புகளும்
பால கணபதி
வாழைப்பழம்இ மாம்பழம்இ பலாப்பழம்இ கரும்பு ஆகியவற்றைத் தமது நான்கு கைகளிலும் தரித்துக் கொண்டு ஐந்தாவது கையான துதிக்கையில் மோதகத்தை வைத்துக் கொண்டிருப்பவரும் இளம்பரிதிக்கு நிகரான திருமேனியை உடையவரும்இ எங்கும் ஒளியுடன் விளங்குபவரும்.

தருண கணபதி
கயிறுஇ மாவெட்டிஇ அபூபம்இ (அப்பம்) விளாம்பழம்இ நாவற்பழம் தம்முடைய ஒற்றைக் கொம்புஇ நெற்கதிர்இ கரும்பு ஆகியவற்றைத் தமது எட்டுக் கைகளிலும் எப்பொழுதும் தரித்துக் கொண்டு தருண சூரியனை நிகர்த்த காந்தியோடு விளங்கும் ஒப்பற்ற பெருமை வாய்ந்தவர் தருண கணபதி.

பக்த கணபதி
தேங்காய்இ மாம்பழம்இ வாழைப்பழம்இ வில்வத்தாலான பாயசம் நிறைந்த பாத்திரம் ஆகியவறைத் தமது நான்கு கைகளிலும் தரித்துக் கொண்டுள்ளவரும்இ சரத் காலத்தில் தோன்றும் நிறைமதியைப் போன்ற திருமேனியை உடையவரும்.

வீர கணபதி
வேதாளம்இ வேல்இ பாணம்இ வில்இ சக்கராயுதம்இ கத்திஇ கேடயம்இ சம்மட்டிஇ கதைஇ மாவெட்டிஇ நாகம்இ கயிறு ஆகியவற்றையும் சூலத்தையும்இ குந்தம்இ கோடாரிஇ கொடி என்பவற்றையும் தமது பதினாறு கைகளில் தரித்துக் கொண்டவரும் செந்நிறப்பொலிவுடன் விளங்குபவரும்.

சக்தி கணபதி
பச்சை நிறம் தோய்ந்த திருமேனியையுடைய தேவியைத் தழுவிய வண்ணம் ஒருவருக்கொருவர் தழுவிக் கொண்டுள்ள இருப்பையுடையவரும்இ சந்தியாகாலம் போன்ற செந்நிறம் தோயப் பெற்றவரும்இ கயிறு மாவெட்டி என்ற இரண்டையும் தம் கைகளில் தரித்துள்ளவரும்இ அச்சத்தை நீக்குகிறவரும்.

த்விஜ கணபதி
புத்தகம்இ உருத்திராக்க மாலைஇ தண்டம்இ கமண்டலம் ஆகியவற்றின் சோபையினால் ஒளிருகின்ற கைகளின் அலங்காரத்தை உடையவர்இ நான்கு யானை முகம் கொண்டவர் த்விஜ கணபதி.

சித்தி கணபதி
நன்கு பழுத்த மாம்பழம்இ பூங்கொத்துக்கள்இ கருப்பங்கழிஇ எள்ளாலான மோதகம் ஆகியவற்றுடன் பரசுவையும் முறையே தமது நான்கு கைகளிலும் தரித்துக்கொண்டுஇ ஸ்ரீ ஸம்ருத்தி என்ற தேவியுடன் வீற்றிருப்பவர் சித்தி கணபதி.

உச்சிஷ்ட கணபதி
குவளை மலர்இ மாதுளம்பழம்இ வீணைஇ நெற்கதிர்இ கயிறுஇ உருத்தி;ராக்க மாலை ஆகியவற்றைத் தம்முடைய ஆறு கைகளிலும் முறையே தரித்துக்கொண்டு கரும்பச்சை நிறமுடைய திருமேனியுடன் விளங்குகிறார் உச்சிஷ்ட கணபதி.

விக்ன கணபதி
சங்குஇ கரும்புஇ வில்இ மலர்இ பாணம்இ கோடாரிஇ கயிறுஇ சக்கரம்இ தமது கொம்புஇ மாவெட்டிஇ நெற்கதிர்இ சரம்இ முதலியவற்றினாலும் பன்னிரண்டு கைகளிலும் ஆஸ்ரயித்துள்ள ஆயுதங்களினாலும் சுற்றிலும் விரும்பப் பெற்ற அலங்காரங்களினாலும்இ மிக்க சோபையோடு விளங்குகிறவரும்இ ஸ்வர்ண நிற திருமேணி கொண்டவருமே விக்ன கணபதி.

க்ஷிப்ர கணபதி
கொம்புஇ கற்பகக்கொடிஇ கயிறுஇ மாவெட்டி ஆகியவற்றை முறையே தமது நான்கு கைகளிலும்இ ஐந்தாவதான துதிக்கையில் இரத்தினமிழைத்த தங்கக் குடத்தையும் வைத்துக் கொண்டு விளங்குபவராய்இ செம்பருத்தி மலரென மனத்தைக் கவரும் காந்தியுடையவர் க்ஷிப்ர கணபதி.

ஹேரம்ப கணபதி
இரண்டு கைகளிலும் அபய முத்திரையையும் வரத முத்திரையையும்இ மற்ற எட்டு கைகளில் முறையே கயிறுஇ தந்தம்இ அக்ஷமாலைஇ மாவெட்டிஇ கோடாரிஇ இரும்பாலான உலக்கைஇ மோதகம்இ பழம்இ ஆகியவற்றையும் தரித்துக் கொண்டுள்ளவரும்இ சிங்கத்தின் மீது அமர்ந்துள்ளவரும்இ ஐந்து யானை முகங்களுடையவருமே ஹேரம்ப கணபதி.

லக்ஷ்மி கணபதி
கிளிஇ மாதுளம்பழம் இனைந்த மாணிக்கமான குடம்இ மாவெட்டிஇ கயிறுஇ கற்பக கொடிஇ கத்தி ஆகியவற்றினால் ஒளிமயமாகி வெண்ணிறப் பெருக்கையுடையவரும்இ நீல வர்ண ஆம்பல் மலர்களைக் கையில் கொண்ட இரு தேவியரை அருகில் அமர்த்திக் கொண்டுள்ளவரும்இ வரம் தரும் கையையுடையவருமே லக்ஷ்மி கணபதி.

மஹா கணபதி
சிறந்த யானையின் முகத்தையுடையவரும் சென்னியில் பிறையைச் சூடியவரும்இ சென்னிறம் தோய்ந்தவரும்இ முக்கண்ணரும்இ தமது மடியில் கையில் தாமரை மலருடன் அமர்ந்துள்ள அன்புக்குரிய நாயகியினால் தழுவப் பெற்றவரும் மாதுளைஇ கதைஇ கரும்புஇ வில்இ ஒளிதரும் சக்கரம்இ தாமரை மலர்இ கயிறுஇ நெய்தல்இ நெற்கதிர்இ தமது கொம்பு ஆகியவற்றை முறையே தமது பத்துத் திருக்கரங்களிலும் பதினோராவது துதிக்கையில் ரத்தின கலசத்தைத் தரிசித்துக் கொண்டுள்ளவருமே மஹா கணபதி.

விஜய கணபதி
கயிறுஇ மாவெட்டிஇ தன் கொம்புஇ மாம்பழம் ஆகியவற்றையுடையவரும்இ மூஷிக வாகனத்தை உடையவரும் செந்நிறம் கொண்டவருமான விஜய கணபதி; நம்முடைய இடையூறுகள் யாவற்றையும் அழிப்பவராவார்.

ந்ருத்த கணபதி
பாசம்இ அங்குசம்இ அப்பம்இ உலக்கைஇ தந்தம் ஆகியவற்றைத் தமது ஐந்து கைகளிலும் தரித்துக்கொண்டு ஆறாவதாக அசைகிற துதிக்கையினால் செய்யப்பெற்ற சிறந்த மோதிரம்போல் வளைந்துள்ள நிலையுடையவரும்இ மஞ்சள் நிறப்பொலிவுடன் இலங்கும் திருமேனியுடையவரும்இ ந்ருத்த என்ற பதத்தைத் துணையாகக் கொண்டவருமே ந்ருத்த கணபதி.

ஊர்த்வ கணபதி
நீலோத்பலம்இ நெற்கதிர்இ தாமரைமலர்இ கரும்புஇ வில்இ பாணம்இ நீண்ட தந்தம்இ கதை ஆகியவற்றை முறையே தமது எட்டுக் கைகளிலும் தரித்துக் கொண்டு பொன்னிறப் பொலிவுடன் இயங்கும் திருமேனி உடையவரும்இ பச்சை நிறத்திருமேனியுடன் விளங்கும் தேவியோடு தழுவப் பெறுவதற்கு விழையுடன் உயர்த்திய கையையுடையருமே ஊர்த்வ கணபதி.

யானைத் தலைஇ மனிதனின் உடல்இ மிகப்பெரிய தொந்திஇ 5 கைகள்இ வளைந்த துதிக்கைஇ கையில் மோதகம்இ பாசம்இ அங்குசம்இ இந்தப் பாரிய உருவத்தை தாங்கும் சிறிய வாகனமான மூஞ்சுறு இப்படி ஒரு கலவை விநாயகர். உருவத்தால் வித்தியாசமாக இருக்கும் விநாயகருக்கான வழிபாட்டு முறைகளும் கொஞ்சம் வித்தியாசம் தான். சிதறு தேங்காய் உடைப்பதுஇ தலையில் குட்டிக் கொள்வதுஇ தோப்புக் கரணம் போடுவதுஇ போன்றவை.

விநாயகர் உருவத்துக்கும் சரிஇ அவருக்கென வழங்கப்படும் வழிப்பாட்டு முறைகளுக்கும் சரிஇ தத்துவப் பின்னணிகள் உண்டு. விநாயகர் ஓங்கார வடிவினர். யானையின் தும்பிக்கை கூட இவர் ஓங்கார வடிவினர் என்பதைக் காட்டக் கூடியதே.

காதுகள்
விநாயகரின் காதுகள் முறம் போல இருக்கின்றன. முறத்தால் புடைக்கும் போது உமி நீங்கி அரிசி மட்டுமே இருக்கும். அதாவது முறம் தீமையை நீக்கி நல்லதை மட்டுமே கிரகித்துக் கொள்கிறது. அதுபோலவே மனிதனும் நல்லது மட்டுமே கொள்ள வேண்டும் என்பது விநாயகரின் காதுகள் காட்டும் தத்துவமாகும்.

யானைத் தலை
யானைத் தலைக்கு பல விசேசங்கள் உண்டு. அக்காலத்தில் பெரியவர்களிடம் பேசும் போது உதடுகளைப் பொத்திக்கொண்டு பேசுவார்கள். இது பணிவின் அடையாளம். இந்த தத்துவத்தை யானையின் வாய் காட்டுகிறது. பேச்சைக் குறைப்பது முக்கியம். மவுனம் மேலான யோகம் என்பதைச் சொல்லாமல் சொல்கிறது யானையின் தலை.

தந்தம்
விநாயகருக்கும் ஒரு தந்தம் முறிந்து இருக்கும். அதற்குப் பல காரணங்கள்இ கதைகள் சொல்வார்கள். அதன் தத்துவம்

ஒவ்வொரு உயிருக்கும் ஒரு விசேசம். மயிலுக்குத் தோகைஇ மானுக்குக் கொம்புஇ அதுபோல் யானையின் உறுப்பில் மேலானதுஇ உயர்ந்தது தந்தம். எதையாவது இழந்தால்தான் ஒன்றினைச் சாதிக்க முடியும். விநாயகர் தன்னிடமுள்ள உயர்வான பொருட்களில் ஒன்றான தந்தத்தை இழந்து தர்மத்தை நிலை நிறுத்தினார் என்பதே அந்தக் கதைகளில் உள்ள தத்துவம்.

மூஞ்சுறு
பெரிய சரீரம் உள்ள விநாயகரை சிறிய மூஞ்சுறு எப்படி தாங்குகிறது?

புராணத்தில் அசுரன் ஒருவன் மூஞ்சுறு ஆனான் என்ற தகவல் உள்ளது. தத்துவப்படி பார்த்தால் விநாயகர் யோகா சக்திக்கு அதிபதி. மூலாதரத்திலிருந்து யோகாக்னி எழும் நிலையில் மொறு மொறுவென்று ஒரு ஓசை வரும். அந்த ஒலியும்இ பெருச்சாளியின் ஒலியும்இ ஒன்றாக இருக்கும் என்பது யோகிகளின் வாக்கு. மூஞ்சுறுவின் மேல் விநாயகர் இருக்கிறார் என்பது மூலதார சக்தியின் மீது விநாயகர் இருக்கிறார் என்பதைக் காட்டும் குறியீடாகும்.

பெரிய உடம்பை சிறிய வாகனம் தாங்குகிறது. எதனால்? அவர் உடலை லேசாக்கி அமர்கிறார். அது போல தன்னைத் தாங்கும் பக்தர்களின் மனதிலும் எந்த கஷ்டங்களும் அழுத்தாமல் உட்காருவார் என்பதை இந்த அமைப்பு காட்டுகிறது.

வழிபாட்டு அமைப்புகள்
வழிபாட்டு அமைப்புகள் கூட வித்தியாசமானவைஇ உடலுக்கு நன்மை தருபவை. தலையில் குட்டிக் கொள்வதும்இ தோப்பு கரணம் போடுவதும்இ யோக சக்தியை வளர்க்கக் கூடியவை. இப்படி எல்லா வகைகளிலும் விநாயகர் தத்துவ முத்திரைகளின் வெளிப்பாடாகவே காட்சி தருகிறார்.

Sharing is caring!