விநாயகர் வழிபாட்டில் அறிவியல்

விநாயகர் சதுர்த்திக்கு, களிமண்ணால் விநாயகர் திருவுருவம் செய்து விநாயகர் சதுர்த்தி நாளிலிருந்து பத்து நாள் வரை ஊர் பொது இடத்தில் வைத்து அதற்கு இயற்கைப் பூக்கள் மற்றும் மூலிகைகளால் அர்ச்சனை செய்து,  10வது  நாளில் திருவுருவத்தை ஊர்வலமாக எடுத்துச் சென்று குளத்தில் கரைத்து விடுவர்.

களிமண், குளத்து நீரில் உள்ள கலங்கலை ஈர்த்து, குடிநீரைத் தெளிவடையச் செய்யும் தன்மையுள்ளது.மூலிகைகள் மற்றும் இயற்கைப் பூக்கள் குடிநீரில் கலந்து மருத்துவத் தன்மையை உண்டாக்கும் தன்மையுள்ளது. இக்குடிநீரானது ஆவணி மாத பருவகால மாற்றத்தால் ஏற்படும் தொற்று நோய்களைத் தடுக்கும் தன்மை வாய்ந்ததாக இருந்தது.

நெற்றியின் இரு பொட்டுகளிலும் குட்டிக்கொள்வதால் மூளையில் உள்ள பிட்யூட்டரி சுரப்பி நன்கு சுரக்கும்.தோப்புக்கரணம் போடுவது மூட்டு மற்றும் கால்களுக்கு வலிமை உண்டாகும்.
விநாயகர்,அரசமரத்தடியில் வீற்றிருக்கிறார்.

கிருஷ்ண பரமாத்மா, மரங்களில் நான் அரச மரமாக இருக்கிறேன்  என, பகவத் கீதையில் கூறியுள்ளான்.  கிராமங்களில், ஊர்ப்பஞ்சாயத்து, அரசமரத்தின்கீழ் நடப்பது வழக்கம்.
ஹோமங்களின் போது, அரசமர குச்சிகள் தான் பயன்படுத்தப்படுகின்றன.

திருமண வீடுகளில் அரசாணிக்கிளை மணமேடைகளில் கட்டப்படுகிறது. மரங்களை நடுவது  மழைக்காக மட்டுமல்ல.  ஆக்சிஜனை அதிகமாகஅவை வெளிவிடும் என்பதால்தான்.

அரசமரத்திற்கு 95 சதவீதமும்,  வேப்பமரத்திற்கு 90  சதவீதமும் ஆக்சிஜனை வெளியிடும் சக்தி இருக்கிறது. எனவேதான் அரசும் வேம்பும் இணைந்த நிலையில், விநாயகர் சிலைகளை அதன்  அடியில் வைப்பதுண்டு. மேலும் அரசமர பட்டையில், ‘செனட்டோனியம்’ என்ற ரசாயனப் பொருள் உள்ளது. இப்பொருள் கர்ப்பம் தரிக்கும்  ஆற்றலை  வளர்க்கும்.

Sharing is caring!