விபூதியின் வகைகளும், தயாரிக்கும் முறையும்!

கல்பம் என்பது, கன்றுடன் கூடிய  பசுவின் சாணத்தை, பூமியின் விழும் முன்பாகல தாமரை இலையில் பிடித்து, உருண்டையாக்கி, பஞ்ச பிரம்ம மந்திரங்களால், சிவாக்கினியில் எரித்து எடுப்பது. இதனை ‘கல்பத் திருநீறு’ என்பார்கள்.

காடுகளில் கிடைக்கும் பசுஞ் சாணங்களைக் கொண்டு, முறைப்படி தயாரிக்கப்படுவது ‘அணுகல்பத் திருநீறு’ எனப்படும்.

மாட்டுத் தொழுவம் அல்லது மாடுகள் மேயும் இடங்களில் இருந்து எடுத்த சாணத்தைக், காட்டுத்தீயில் எரித்து, பின்பு சிவாக்கினியில் எரித்து எடுக்கப்படுவது ‘உபகல்பத் திருநீறு’ ஆகும்.

அனைவராலும் சேகரித்துக் கொடுக்கப்படும் சாணத்தை, சுள்ளிகளால் எரித்து எடுப்பதற்கு ‘அகல்பத் திருநீறு’ என்று பெயர்.

இந்த நான்கு வகை விபூதிகளில் கல்பம் என்று சொல்லப்படும் விபூதி மிகச்சிறப்பான அருள் சாதனமாக கருதப்படுகிறது.
சாதாரணமான விபூதியை விட, முறைப்படி தயார் செய்த விபூதிக்கு ,உடனடி பலன் கிடைக்கும்.

விபூதி  தயாரிக்கும் முறை

திருநீற்றுப் பச்சிலைகளையும், வில்வப்பழ ஓட்டையும் நன்கு அரைத்துக்ஷ, அதனை பசுஞ்சாணத்துடன்  கலக்க வேண்டும்.  இந்தக் கலவையை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி வெயிலில் நன்கு காய வைக்கவேண்டும்.

Sharing is caring!