வில்வை….ஏழு ஜென்ம பாவத்தை போக்கும்

சிவனுடைய அருளையும் அன்பயும்  பெறுவதற்கு வில்வ மாலை ஒன்று போதும்…வில்வத்தில் பல வகைகள் உண்டு. மகா வில்வம், கொடிவில்வம், கற்பூர வில்வம், சித்த வில்வம் என்று பல வகைகள் உண்டு. மூன்று, ஐந்து, ஏழு இதழ்கள் கொண்ட வில்வ இலைகள் இருந்தாலும் மூன்று இதழ்கள் கொண்ட வில்வ இலைகளே பூஜைக்கு உகந்தவையாக பயன்படுத்தப்படு கின்றன.

வில்வத்தில் மஹாலஷ்மி வாசம் செய்கிறாள். ஸ்ரீ பலம், சிரேஷ்ட வில் வம், கந்தபலம் என்று வில்வம்  வடமொழியில் அழைக்கப்படுகிறது. ஈஸ்வ ரின் இச்சா, கிரியா ஞான சக்தி வடிவமாய்  ஈஸ்வரனின் அருளால் பூமியில்  வில்வம் உருவானது. அதனாலேயே ஈஸ்வரனுக்கு பிடித்தவற்றில் முதன்மை யானதாகவும், பூஜைகளில் முதலிடத்திலும்  வில்வம் இருக்கிறது. ஒரு வில் வத்தினால் பூஜை செய்தால் அது இலட்சம் ஸ்வர்ண புஷ்பத்துக்கு சமம் என்று சொல்வார்கள்.

சிவனிடம் உள்ள திரிசூல வடிவம், இறைவனின் முக்குணங்கள் வில்வத் தின் வடிவத்தை ஒத்திருக்கிறது என்கிறது புராணங்கள். வில்வத்தின் இடது பக்க இலை பிரம்மாவாகவும், வலது பக்க இலை விஷ்ணுவாகவும், நடுவில் இருப்பது சிவன் என்றும் சொல்கிறார்கள். ஊழிக்காலத்தில் அழியாமல் இருக்க என்ன செய்வது என்று வேதங்கள் சிவபெருமானிடம்  கேட்டனவாம். அதற்கு ஈஸ்வரன் திருக்கருக்காவூர் திருத்தலத்தில் வில்வ மரத்தின் கீழ் நின்று தவம் செய்யும் படி அருளினார். வேதங்களும் அவ்வாறு வில்வமரங்களாக தவமியற் றியதால் வில்வாரண்யம் என்னும் பெயரை பெற்றது.

வில்வமரத்தை வீட்டிலும் (உரிய முறையில் பூஜை செய்து) திருக்கோயில் களிலும் வளர்ப்பதால் அஸ்வ மேத யாகம் செய்த பலன் கிடைக்கும் என்கிறது புராணம். வில்வ இலையில் சிவனுக்கு அர்ச்சனை செய்தால் கோடி புண் ணியம் கிடைக்கும். வில்வ அர்ச்சனை 108 சிவாலயங்களில் சுற்றி வந்த பலனை கொடுக்கும். புண்ணிய நதிகளில் நீராடிய பலனை கொடுக்கவல்லது வில்வம்.ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்த புண்ணியத்தை வில்வ இலை அர்ச்சனை கொடுக்கும்.

வில்வத்தை அதிகாலைப்பொழுதில் சூரிய உதயத்துக்கு முன்பே  பறிக்க வேண்டும். மூன்று இலைகளையும் தனியாக  பறிக்காமல் சேர்த்து பறிக்க வேண்டும். அவ்வாறு பறிக்கும் போது அகிலத்தை ஆளும் அகிலாண்டேஸ் வரனுக்கு பூஜை செய்வதற்காகஉன்னை கிள்ளி எடுக்கிறேன். அதை பொறுத்து கொள்ள வேண்டும் என்று மனதுக்குள் பிரார்த்தனை செய்தபடி வில்வத்தை பறிக்க வேண்டும் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன. வில்வத்துக்கு தோஷம் இல்லை என்பதால் இலேசாக தண்ணீர் தெளித்து பூஜைக்கு பயன்படுத்தலாம். அதே நேரம் சோமவாரம், அமாவாசை, பெளர்ணமி , அஷ்டமி, நவமி, சதுர்த்தி ஆகிய நாட்களில் பறிக்க கூடாது. வில்வத்தை ஆறுமாதங்கள் வரை வைத்து பூஜைக்கு பயன்படுத்தலாம். காய்ந்த வில்வ இலையும் பூஜைக்கு உகந்தது என் பது குறிப்பிடத்தக்கது.

மகா சிவாரத்திரியன்று வில்வாஷ்டகம் பாராயணம் செய்து, வில்வம் சார்த்தி சிவனைத் தரிசித்தால் ஏழேழு ஜென்ம பாவங்களும் நீங்கும் என்பது ஐதிகம். ஞாயிறன்று  வில்வ இலையால் சிவனை அர்ச்சிப்பது சிறப்பானது என்கிறார்கள் ஆச்சார்ய பெருமக்கள்.

Sharing is caring!