வீட்டில் மகிழ்ச்சி நிலவ இதை பின்பற்றுங்கள் !

வீட்டில் அமைதி, செல்வம், இன்பம் மற்றும் அனைத்து வகையான நல்ல விஷயங்கள் நிலைக்க, நாம் சிலவற்றை பின்பற்ற வேண்டும்.
வாசல்படியில் நின்று கொண்டு, யாருக்கும் எதையும் கொடுக்கக் கூடாது. வாசல்படியில் நின்று வாங்கவும் கூடாது. வீட்டில், வாசற்படி, உரல், ஆட்டுக்கல், அம்மி ஆகியவற்றில் உட்காரக்கூடாது.

இரவு நேரங்களில், பால், மோர், தண்ணீர் ஆகியவற்றை  அடுத்தவர்கள் எடுத்து செல்ல அனுமதிக்கக் கூடாது.
வெற்றிலை, வாழையிலை இவைகளை வாடவிடக்கூடாது. வெற்றிலையை தரையில் வைக்கக்கூடாது.

அதிகமாகக் கிழிந்த துணிகளை உடுத்தக்கூடாது. துணிமணிகளை உடுத்திக்கொண்டே தைக்கக் கூடாது.
உப்பை தரையில் சிந்தக்கூடாது. அரிசியை கழுவும் போது, தரையில் சிந்தக்கூடாது.

வீட்டில்,  காலை வேளைகளில் வெங்கடேச சுப்ரபாதமும், மாலை வேளைகளில் விஷ்ணு சஹஸ்ரநாமமும் ஒலித்தால், செல்வச் செழிப்பு தாமாகவே வந்துவிடும்.

வீட்டில் நெல்லி மரம் இருந்தால், லட்சுமி கடாட்சம் பெருகும். விஷ்ணுவின் அம்சமாக நெல்லிமரம் திகழ்வதால், நெல்லி மரத்தில் மகா லட்சுமி  வாசம் செய்கிறாள். நெல்லிக்கனிக்கு ஹரிபலம் என்ற பெயரும் உண்டு.

நெல்லிமரம் இருக்கும் வீட்டில் தெய்வீக அருள் நிறைந்திருக்கும். எவ்வித தீய சக்திகளும் அணுகமுடியாது. நெல்லிமரத்தடியில் கிடைக்கும் தண்ணீர், உவர் தன்மையில்லாமல், சுவையாக இருக்கும்.

Sharing is caring!