வெங்காயத்தில் இவ்வளவு நன்மைகளா ??

வெங்காயத்தில் வைட்டமின்களும் இரும்புச் சத்தும் உடலுக்குத் தேவையான பல சத்துகளும் இருப்பது நம் எல்லோருக்கும் தெரிந்ததுதான். ஆனால் அதையும் தாண்டி பாலுணர்வைத் தூண்டக் கூடிய பொருட்களும் வெங்காயத்தில் அதிக அளவில் நிறைந்துள்ளன. தேனீ மற்றும் குளவி கொட்டிவிட்டால் வலி உயிர் போகிறது, என்பார்கள். அதோடு அதில் இருக்கிற விஷம் சில நேரம் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தி விடுவது உண்டு. அப்படி தேனீ, குளவி ஏதேனும் கொட்டிவிட்டால் உடல் திடகாத்திரம் உள்ளவர்களாலேயே தாங்கிக் கொள்ள முடியாது.

ஆனால் பெரியோர்களோ விஷக்கடி ஏற்பட்ட இடத்தில் சில வெங்காயத்தை எடுத்து நசுக்கித் தேய்த்து விடுவார்கள். ஆக, வெங்காயத்தில் மிக அதிக அளவில் அழற்சி எதிர்ப்புப் பொருள் இருப்பது தெரிந்ததால் நம் முன்னோர்கள் அவ்வாறு செய்திருக்கிறார்கள். பொதுவாக நம்முடைய உடலில் அழற்சி உண்டாவதற்கு ப்ராஸ்டாகிளான்டின்ஸ் என்னும் வேதிப்பொருள்தான் காணமாக அமைகிறது. ஆனால் வெங்காயம் அந்த பொருளை சிதைத்துவிடுகிறது.

உடலில் விஷம் சேராமல் நச்சுத் தன்மையை வெளியேற்றி விடுகிறது. பொதுவாக ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் டாக்டரைப் பார்க்க வேண்டிய அவசியமே இருக்காது என்பார்கள். அதுபோலத் தான் வெங்காயமும். வெங்காயத்தை தினமும் உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் எந்த பிரச்சினையும் இல்லாமல் ஆரோக்கியமாக வாழ முடியும். வெங்காயத்தை மற்ற காய்கறிகள் போல் இப்படித்தான் சாப்பிட வேண்டும் என்பதெல்லாம் கிடையாது. அதை பச்சையாகவோ, சமைத்தோ, சூப்பாகவோ, சாலட்டாகவோ எப்படி வேண்டுமானாலும் சாப்பிடலாம்.

பொதுவாக வெங்காயம் இதயத்தின் உற்ற தோழன் என்று அழைக்கப்படுகிறது. வெங்காயத்துக்குள் இருக்கின்ற உட்பொருட்கள் ரத்தத்தில் கொழுப்பு சேர விடாமல் தடுக்கிறது. இயல்பாகவே வெங்காயத்திற்கு கொழுப்பைக் கரைக்கும் தன்மையும் இருக்கிறது. பொதுவாக ஆண்கள் எங்கு வேண்டுமானாலும் சிறுநீர் கழித்துக் கொள்ள முடியும். ஆனால் பெண்களின் நிலை அப்படி அல்ல.

பெண்கள் சிறுநீரை அடக்கி வைப்பதால் அதில் நுண்ணுயிரிகள் உற்பத்தி அதிகமாகி நோயை உண்டாக்கும். இதன்மூலம் சிறுநீர்தாரை தொற்று ஏற்படும். அதனால் பெண்கள் வெங்காயத்தை உணவில் அதிகமாகச் சேர்த்துக் கொண்டால் கழிவுப் பொருட்களைக் கரைத்து அழற்சியை குறைக்கும். சிறுநீர்த்தாரை தொற்று குறையும். யூரிக் அமிலம் அதிகமானால் சிறுநீர்ப் பையில் கற்கள் உண்டாகும்.

இதுபோன்று யூரிக் அமிலத்தால் மூட்டுவலி தொல்லை இருப்பவர்கள் உணவில் அதிக அளவில் வெங்காயம் சேர்த்துக் கொள்ளுங்கள். மூட்டுவலி அதிகமாக இருப்பவர்கள் கடுகு எண்ணெயுடன் வெங்காயத்தை அரைத்தோ அல்லது அதன் சாறையோ கலந்து வலி உள்ள இடத்தில் தடவினால் மூட்டுவலி குறைய ஆரம்பிக்கும். பொதுவாக பருவ நிலை மாற்றங்கள் ஏற்படுகிற போது, அடிக்கடி சளி பிடிக்கும். இருமல் வரும். நுரையீரலில் சிலருக்கு அழற்சி உண்டாகும். மூக்கில் எரிச்சல் உண்டாகும். இத்தகைய பிரச்சினை உள்ளவர்கள் வெங்காயச் சாறில் தேன் கலந்து சாப்பிட்டு வரலாம். நுரையீரலில் தேங்கியிருக்கிற நச்சுக் கழிவுகளை வெளியேற்றுகின்ற ஆற்றல் இதற்கு உண்டு.

Sharing is caring!