வெண்டைக்காயை நீரில் ஊற வைத்து அதிகாலையில் வெறும் வயிற்றில் குடிங்க?

வெண்டைக்காயில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பை கரைக்கும் பெக்டின், இதயத் துடிப்பை சீராக்கும் மக்னீசியம் இருக்கிறது.

வெண்டைக்காயில் இருக்கும் பெக்டின் அல்சரை கட்டுப்படுத்துகிறது. இதில் நன்மைத் தரக்கூடிய பாக்டீரியாக்கள் அதிகம் உள்ளன. அது மட்டும் அல்ல, வெண்டைக்காய் நீரில் அதிக நன்மைகள் உண்டு.

வெண்டைக்காய் நீர் என்பது வெண்டைக்காயை வேக வைத்தோ அல்லது அரைத்து எடுக்கும் நீரோ கிடையாது. வெண்டைக்காயை ஊற வைத்திடும் நீர் தான் அது.

முதலில் நான்கு வெண்டைக்காய்களை எடுத்துக்கொள்ளுங்கள், அதனை சுத்தமாக கழுவி தலைப்பகுதியையும் வால் பகுதியையும் வெட்டிவிடுங்கள்.

பின்னர் அதனை நீள வாக்கி வெட்டி, சற்று பெரிய பாத்திரத்தில் போட்டு வெண்டைக்காய் முழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்ற வேண்டும். குறைந்தது எட்டு மணி நேரம் வரை ஊற வேண்டும் என்பதால் முந்தைய நாள் இரவு ஊறவைத்துவிட்டு மறுநாள் காலையில் அந்த நீரை குடிக்கலாம்.

நன்மைகள்
  • ரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த நோய் மிகச்சிறந்த பலன்களை தரும்.
  • இந்த நீரை குடிப்பதனால் ரத்த செல்கள் வேகமாக உற்பத்தி ஆக உதவுகிறது. இதனால் ரத்த சோகை கட்டுப்படும்.
  • இதில் அதிகப்படியான மினரல்ஸ் மற்றும் விட்டமின்கள் இருக்கின்றன. அவற்றில் விட்டமின் ஏ மற்றும் விட்டமின் சியும் அடக்கம். அதோடு இதில் இருக்கும் மக்னீசியம் ரத்தத்தை அதிகப்படுத்துகிறது.
  • தொடர் இருமல், வறட்டு இருமல் இருப்பவர்கள் தொடர்ந்து வெண்டைக்காய் ஊற வைத்த நீரை குடித்து வர நல்ல பலன் கிடைக்கும்.
  • இதில் இருக்கும் ஆன்ட்டி பாக்டீரியாக்கள் மற்றும் ஆண்ட்டிசெப்டிக் துகள்கள் தொண்டையில் ஏற்ப்பட்டிருக்கும் பாக்டீரியா தொற்றினை நீக்கச் செய்திடும்.
  • வெண்டைக்காயில் நிறைய இன்ஸுலின் இருக்கிறது. இது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.
  • அதோடு வெண்டைக்காய் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையை கட்டுப்படுத்தவும் செய்கிறது. அதனால் இந்த நீரை தொடர்ந்து எடுத்து வர சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.
  • வெண்டைக்காயில் அதிகப்படியான கரையக்கூடிய ஃபைபர் இருக்கிறது. அதோடு இது கலோரி குறைவான காய் என்பதால் பயமில்லாமல் சாப்பிடலாம்.
  • வெண்டைக்காய் ஊற வைத்த தண்ணீரை தொடர்ந்து எடுத்து வர அது நம் உடலில் உள்ள கொலஸ்ட்ராலை குறைத்திடும். அதோடு நம் இதயத்தையும் பாதுகாக்கும்.

Sharing is caring!