வெந்தயத்தை இப்படி செய்யுங்கள்……சுகதேகி மட்டுமல்ல பணக்காரரும் நீங்கள்தான்…!

இன்று மனிதர்களிடையே பரவலாகக் காணப்படும் தொற்றா நோய்கள் உலகை அச்சுறுத்தும் நோய்களாக உருவெடுத்து வருகின்றன.சிறுவர்கள் தொடக்கம் பெரியவர்கள்வரை நீரிழிவு, உயர் குருதியமுக்கம், மாரடைப்பு, தசைப்பிடிப்பு, என்புசார் நோய்கள் போன்றன ஆட்டிப்படைத்தவண்ணமுள்ளன.

இதனால், அரசு மருத்துவமனைகளிலும் தனியார் மருத்துவமனைகளிலும் மேற்கண்ட நோயாளிகளின் தொகை நாளுக்கு நாள் அதிகரித்தவண்னமேயுள்ளன. தனியார் மருத்துவமனைகளில் பணத்தைச் செலவிட்டு ஆண்டியானோரின் கதைகள் ஏராளமுள்ளன. தொற்றா நோய்களின் பெருக்கத்தினால் எண்ணிலடங்கா மக்களின் பணம் நாளுக்கு நாள் மருத்துவச் செலவுக்காகவே  இறைக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. மேற்சொன்ன நோய்களின் பெருக்கத்துக்கு இரத்தத்தில் குளுக்கோஸின் பெருக்கம் அதிகரித்துக் காணப்படுகின்றமையும் ஒரு காரணமாக அமைகின்றது.இரத்தத்தில் குளுக்கோஸின் பெருக்கம் அதிகரிப்பதற்கு இன்சுலினின் செயற்பாடின்மையே முக்கிய காரணமாக விளங்குகின்றது.

இதனால் இன்சுலினை அதிகரிப்பதற்காக செயற்கை மருத்துவத்தை நாடவேண்டிய நிலைகள் ஏற்படுகின்றன. மருந்து மாத்திரைகள் மூலமாகவும் ஊசி ஏற்றுதல் மூலமாகவும் உடலில் இன்சுலினின் இயக்கம் ஊக்குவிக்கப்படுகிறது. இது பலவித பக்கவிளைவுகளை ஏற்படுத்துகின்றது.

ஆனால், இயற்கையிலேயே இன்சுலின் அதிகமாக கிடைக்கும் அற்புதமான பொருட்களில் ஒன்றுதான் வெந்தயம். அதுவும் முளை கட்டிய வெந்தயத்தில் 4 – Hydroxyisoleucine எனும் இயற்கை இன்சுலின் அதிகமாக கிடைக்கின்றது.

வெந்தயத்தை எவ்வாறு முளைகட்ட வைப்பது?

100 கிராம் வெந்தயத்தை நன்றாக நீரில் கழுவவேண்டும். அதில் 200 மில்லி லீற்றர் தண்ணீர் ஊற்றி 12 மணிநேரம் ஊறவைக்கவேண்டும்.

அதிகமாக நீர் ஊற்றக்கூடாது. அவ்வாறு அதிக நீர் ஊற்றினால் அதிகப்படியான நீரை வடிகட்ட வேண்டிவரும், அதனால் அந்த நீரில் கலந்த மருத்துவத் தன்மை வீணாகும்.

பன்னிரண்டு மணிநேரம் கழித்து ஒரு வெள்ளை நிற பருத்தி துணியில் ஊறிய வெந்தயத்தை முடிந்து ஒன்றரை நாள் அளவில் (36 மணி நேரம்) மூடி வைக்கவேண்டும். 36 மணி நேரம் கழித்து துணியை பிரித்து பார்த்தால் வெந்தயம் நன்றாக முளை கட்டியிருக்கும். இதன் எடை 300 கிராம் இருக்கும்.

முளை விட்ட வெந்தயத்தை நன்றாக வெயிலில் காயவைத்தால் மீண்டும் 100கிராம் அளவுதான் இருக்கும். காய்ந்த வெந்தயத்தை பொடியாக்கி காற்றுபுகாமல் பிளாஸ்டிக் அல்லது போத்தலில் மூடி வைத்து உபயோகப்படுத்தலாம்.வெந்தயத்தை முளைகட்டி சாப்பிடும்போது அதில் உள்ள 4-ஹைட்ராக்சில் ஐசோலூசின் (4 – Hydroxyisoleucine) எனும் தாவர இன்சுலின் 40% அதிகமாகிறது என கண்டு அறியப்பட்டுள்ளது.இந்த பொடியை ஒவ்வொரு முறையும் உணவு உட்கொள்வதற்கு 15 நிமிடத்திற்கு முன் 4 முதல் 6 கிராம் வரை (உடலின் சுகர் அளவை பொறுத்து) 1 டம்ளர் நீரில் கலந்து சுவைத்து உட்கொள்ளலாம்.

முளைகட்டிய வெந்தயத்தை, மூன்று வேளையும் சாப்பிடுவதற்கு 15 நிமிடத்திற்கு முன் மேலே கூறியபடி தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்த சர்க்கரை அளவுகட்டுப்பாட்டிற்குள் இருக்கும் என நிரூபணமாகியுள்ளது.

வெந்தயத்திலுள்ள 4-ஹைட்ராக்சில் ஐசோலூசின் எனப்படும் இன்சுலின்மூலம் உடலிலுள்ள சர்க்கரை அளவு மட்டும் குறைவதில்லை. உடலின் கெட்ட கொழுப்பை குறைக்கும் சக்தியும் இந்த இன்சுலினுக்கு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.மேலும், தசைக் கணுக்களில் கொழுப்புக்கள் சேர்வதையும் தடுப்பதுடன் உடல் கட்டுமானத்தை பேணும் தன்மையும் இதில் உள்ளது.

ஆகவே, வெந்தயத்தில் உள்ள இயற்கை இன்சுலின் செயற்பாட்டை உடலின் ஆராக்கியத்திற்காக சரியான முறையில் பயன்படுத்துவோமாயின் நாம் ஆரோக்கியமாக வாழ்வது மட்டுமன்றி தேவையற்ற பணச் செலவுகளைக் கடுப்படுத்தி சுக தேகியான பணக்காரர்களாக வாழமுடியும் என்பது திண்ணமாகும்.

Sharing is caring!