வெந்தயம் அளவுக்கு மீறி சாப்பிட்டால் ஆபத்தாம்!

நாம் அன்றாடம் சமையலில் சேர்க்கப்படும் ஓர் பொருள் தான் வெந்தயம்.

வெந்தயம் ஆயுர்வேதத்தில் பாரம்பரிய மருத்துவ பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

வெந்தயத்தை எந்த வடிவத்தில் எடுத்தாலும், அதனால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.

ஏனெனில் வெந்தயத்தில் வைட்டமின் சி, புரோட்டீன்கள், நார்ச்சத்து, நியாசின், பொட்டாசியம், இரும்புச்சத்து மற்றும் அல்கலாய்டுகள் போன்றவை ஏராளமாக உள்ளது. மேலும் இதில் டையோஸ்ஜெனின் என்னும் சேர்மம் உள்ளது.

இருப்பினும் இன்று அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பதற்கு ஏற்ப நாம் உணவில் சேர்த்து கொள்ளும் வெந்தயத்தை அதிக அளவு உண்டால் பலவிதமான தீமைகள் ஏற்படுத்தும் என்று கூறப்படுகின்றது.

அந்தவகையில் வெந்தயம் சாப்பிடுவதனால் ஏற்படும் பக்கவிளைவுகள் என்னென்ன என்பதை பற்றி பார்ப்போம்.

  • வெந்தயத்தை அதிக அளவில்(100 கிராமிற்கு) மேல் எடுத்து கொள்பவர்களுக்கு ஏற்படும் பொதுவான பிரச்சனையாக இருப்பது குமட்டல். வெந்தயத்தை சாப்பிடும் ஒவ்வொரு முறையும் உங்களுக்கு வாந்தி அல்லது குமட்டல் உணர்வோ ஏற்பட்டால் தவிர்த்துவிடுவது சிறந்தது.
  • வெந்தயத்தை 100 கிராமை விட அதிகமாக ஒரே நேரத்தில் எடுத்து கொண்டால், அது உங்கள் குடல் இயக்கத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும். அதன் விளைவாக வயிற்றுப்போக்கு மற்றும் அஜீரணம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
  • எடையை அதிகரிக்க விரும்பினால் நிச்சயமாக வெந்தயம் சாப்பிடக்கூடாது. ஏற்கனவே ஈட்டிங் டிஸார்டர் எனப்படும் உணவுகோளாறுகள் இருந்தால் இதனை சாப்பிட கூடாது ஏனெனில் வெந்தயம் இந்த பிரச்சனையை மேலும் அதிகரிக்கும்.
  • சர்க்கரை நோய்க்காக மருந்து சாப்பிடுபவர்கள் மாத்திரைகளுடன் சேர்த்து வெந்தயமும் சாப்பிடும் போது சர்க்கரையின் அளவை மிகவும் குறைத்துவிடும். இது அதிக ஆபத்தானது.
  • கர்ப்பிணி பெண்கள் கண்டிப்பாக வெந்தயத்தை சேர்த்துக்கொள்ளக்கூடாது. வெந்தயத்தில் காணப்படும் சப்போனின் என்னும் வேதிப்பொருள் கர்ப்பப்பையில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. இந்த பாதிப்பு கருச்சிதைவாய் கூட இருக்கலாம்.
  • சிலருக்கு வெந்தயத்தையோ அல்லது வெந்தயத்தால் செய்யப்பட்ட உணவுகளையோ சாப்பிட்டவுடன் உடலில் இருந்து ஒருவித நாற்றம் வெளிப்படும். அவர்கள் வெந்தயம் சாப்பிடுவதை தவர்க்க வேண்டும்.
  • வெந்தயம் அலர்ஜிகளை அதிகரிக்கும். தடிப்புகள், மூக்கில் நீர் வடிதல், கண்ணீர் வருதல் போன்றவை அலர்ஜியின் அறிகுறிகளாகும். அதுமட்டுமின்றி ஆய்வுகளின்படி சிலருக்கு மூச்சு திணறல், தலைவலி மற்றும் மயக்கம் போன்றவையும் ஏற்படுகின்றது.

Sharing is caring!