வெயிலுக்கு ஏற்றது வெள்ளரிக்காய்

கொளுத்தும் வெயிலில் வெளியில் சென்றால் வீட்டிற்கு வரும் போது இது நாம் தானா..?! என்கிற சந்தேகம் நமக்கே வந்து விடும். இப்படி வெயிலின் கொடுமை நம்மை பாடாய் படுத்தி கொண்டிருக்க, இதனை எப்படி சமாளிப்பது என புரியாமல், பலர் குழம்பி போய் இருக்கின்றனர். இன்னும் வெயில் காலமே ஆரம்பிக்காத நிலையில் இது போன்ற பாதிப்புகள் அதிக அளவிலே உள்ளன.

வெயில் காலத்தை மிக சுலபமாக கையாள சில வழிகள் உள்ளன. அவற்றில் மிக முக்கியமானது உணவு பொருட்கள் தான். சில வகையான காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை சாப்பிட்டு வந்தால் எளிதில் இந்த கொடூர வெயிலை சமாளித்து விடலாம். முக்கியமாக வெள்ளரி காய் போன்ற உணவு பொருளை வெயில் காலங்களின் கட்டாயம் சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ஏன் வெயில் காலங்களின் வெள்ளரிக்காய் சாப்பிட வேண்டும்? இதனால் கிடைக்கும் உண்மையான பயன்கள் என்னென்ன? வெள்ளரிக்காய் சாப்பிட்டு வருவதால் எப்படிப்பட்ட ஆரோக்கிய நன்மைகள் உண்டு போன்ற பல கேள்விகளுக்கான பதிலை இங்கு அறிந்து கொள்ளலாம்.

வெயிலை எதிர்க்க

வெயில் காலத்தில் உடலின் எதிர்ப்பு சக்தி மண்டலம் அதிக வலுவாக இருத்தல் வேண்டும். இல்லையெனில், எண்ணற்ற நோய்களின் கூடாரமாக நமது உடல் மாறி விடும். இதற்கு வெள்ளரி காய் தான் சிறந்த தீர்வாக இருக்கும். மற்ற காலங்களை விடவும் கொடை காலங்களில் வெள்ளரி காயை சாப்பிடுவதற்கு சில முக்கிய காரணிகள் உள்ளது.

நச்சுக்கள்

உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற மிக சிறந்த வழி வெள்ளரி காய் தான். அதுவும் வெயில் காலங்களில் அதிக அளவு உடலின் உள் உறுப்புகளில் அழுக்குகள் சேர்ந்து கொள்ளும். இதை முழுமையாக வெளியேற்ற கோடை காலங்களில் வெள்ளரிக்காய் சாப்பிட்டு வந்தால் போதும்.

நீர்சத்து

உடலில் நீச்சத்து குறைபாடு ஏற்பட்டால் மரணம் கூட நேரலாம். இதை தடுக்க மிக சிறந்த வழி வெள்ளரி காய் தான். கிட்டத்தட்ட 95% நீர்சத்து வெள்ளரிக்காயில் உள்ளது. ஆகையால் இதை தினமும் வெயில் காலத்தில் சாப்பிட்டு வந்தால் நீர்சத்து அதிகரிப்பு முதல் இரத்தம் சுத்திகரிப்பு வரை சீராக நடைபெறும்.

இரத்த அழுத்தம்

நார்சத்து, பொட்டாசியம், மெக்னீசியம் போன்றவை அதிக அளவில் வெள்ளரிக்காயில் இருப்பதால் உடலுக்கு வலு சேர்க்கும். முக்கியமாக இரத்த அழுத்தத்தை குறைக்க இது அதிக அளவில் உதவும். மேலும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த வெள்ளரிக்காய் சிறந்த உணவாகும்.

குளிர்ச்சியை தர

வெளியில் சென்று வந்தால் சூரியனின் வெப்பம் உங்களை மோசமான நிலைக்கு தள்ளினால் இனி கவலை படாதீர்கள். உடலை குளிர்ச்சியாக வைத்து கொள்ள வெயில் காலங்களில் தினமும் 1 வெள்ளரிக்காய் சாப்பிட்டு வாருங்கள்.

ஆற்றல் மிக்கது

மற்ற காலங்களை விடவும் வெயில் காலத்தில் நமது உடலானது மிக விரைவிலே சோர்வு அடைந்து விடும். உடலுக்கு உடனடி ஆற்றலை தருவதற்கு வெள்ளரிக்காய் ஒன்றே போதும். மேலும், மூளையின் திறனையும் சுறுசுறுப்பாக வைக்க வெள்ளரிக்காய் உதவுகிறது.

வெப்பத்தை தணிக்க

வயிற்று பகுதியில் உற்பத்தி ஆக கூடிய எண்ணற்ற அளவிலான வெப்பத்தை குறைக்க வெள்ளரி காய் சாப்பிட்டாலே போதும். வெயில் காலத்தில் அதிக அளவிலான வெள்ளரி காய் சாப்பிட்டால் உடல் முழுக்க வெப்பம் தணிய வாய்ப்பு உள்ளது.

கண்

ஒரு துண்டு வெள்ளரிக்காயை கண் பகுதியில் தினமும் 15 நிமிடம் வைத்து எடுத்தால் கண் மிகவும் குளிர்ச்சியாக இருக்கும். அத்துடன் கண் எரிச்சல், கரு வளையங்கள் போன்றவற்றையும் இது குணப்படுத்தும். மேலும், முகத்தின் அழகையும் பாதுக்காக்க வெள்ளரிக்காய் பயன்படும்.

முடி வளர்ச்சி

சிலிகா அதிக அளவில் வெள்ளரிக்காயில் இருப்பதால் முடி உதிரும் பிரச்சினை முடிவுக்கு வந்து விடும். மேலும், அடர்ந்த மிகவும் உறுதியான முடிகளை வளர இது வழி செய்யும். அத்துடன் கை மற்றும் கால் பகுதிகளில் தடவினால் தோல் மென்மை பெறும்.

Sharing is caring!