வெறும் வயிற்றில் காபி குடித்தால் என்ன நடக்கும்?

பொதுவாக காலையில் எழுந்தவுடன் அதிக நபர்கள் விரும்பி குடிக்கப்படுவது காபி தான், காபி குடிக்காத நாள் முழுமை பெறாத நாள் என்று நினைப்பவர்கள் கூட இருக்கின்றனர்.

இதனால் அவர்கள் கணக்கில்லாமல் காபியை குடித்து கொண்டிருப்பர். அதற்கு காரணம் காபியில் இருக்கும் உற்சாகம் அளிக்கும் குணமாகும்.

பெரும்பாலும் உள்ளூர் தயாரிப்புகளை உபயோகிப்பது உங்கள் காபிக்கு அதிக ஆரோக்கியத்தை சேர்க்கும்.

இந்த பழக்கம் பலருக்கும் இருக்கும் ஒன்றாகும். தினமும் காலையில் காலை உணவை தவிர்த்து விட்டு வெறும் காபி குடிப்பதை வழக்கமாக கொண்டவர்கள் பலர் இருக்கிறார்கள்.

காபி குடிப்பது பசியை கட்டுப்படுத்தும், அதனால் அதனை உணவுக்கு மாற்றாக பலர் உபயோகிக்கிறார்கள், ஆனால் இது ஆரோக்கியமான பழக்கமல்ல.

  • காலை உணவிற்கு பிறகு காபி குடிக்கலாம் ஆனால் காபியே காலை உணவாக இருப்பது ஆபத்தானதாகும்.
  • உங்கள் உடல் காபிக்குள் காணப்படும் காஃபினுக்கு பதிலளிக்கும் வகையில் இன்சுலினை வெளியிடுகிறது.
  • இதனால் இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவு பெருமளவில் குறையும்.
  • இது உங்களை மிகவும் சோர்வாக உணரவைக்கும். எனவே காபி குடிப்பதற்கு முன் எதையாவது சாப்பிடுவது நல்லது.

Sharing is caring!