வெறும் வயிற்றில் தேநீர் குடிப்பது நல்லதா? : ஊட்டச்சத்து நிபுணர்களின் பரிந்துரை!

காலையில் எழுந்தவுடன் தேநீர் குடிக்காமல் பலரது பொழுதே விடிவதில்லை என்றே சொல்லலாம். அவ்வாறு நமது வாழ்க்கையோடு ஒன்றிவிட்ட தேநீர் குடிக்கும் முறை சரிதானா? என்று பார்க்கலாம். காலையில் எழுந்தவுடன் தேநீர் அருந்தினால் தான் காலை  கடனை கழிக்கவே முடியும் என நம்மில் பலர் பெருமையாக கூறிக்கொள்வதுண்டு. அதோடு நேரத்திற்கு ஒரு கப் டீ இருந்தால் போதும் எனக்கு உணவே தேவைப்படாது என்று சொல்பவர்களும் உண்டு. இவர்களின் எண்ணங்கள் அல்லது கருத்துக்களில் மருத்துவ  உண்மை பொதிந்துள்ளதா? என்ற கேள்விக்கு இல்லை என்கிற பதிலே கிடைக்கும்.

ஊட்டச்சத்து நிபுணர்களின் கூற்று அல்லது ஆய்வின் படி, காலையில் வெறும் வயிற்றில் தேநீர் குடிப்பதனால் நாளடைவில் மலச்சிக்கலை சந்திக்க நேரிடுமாம்.

தேநீரில் உள்ள  தியோபிலின் எனப்படும் ஒரு வேதிப்பொருள், காலையில் தேநீர் அருந்துவதால் நீர் இழப்பை ஏற்படுத்தி, மலம் கட்டுதல் அல்லது மலச்சிக்கலை உண்டாக்குமாம்.

காலையில் எழுந்தவுடன் முதல் உணவாக தேநீரை எடுத்துக்கொள்வது, அதன் பிறகு உட்கொள்ளக் கூடிய உணவுகளின் சத்துக்கள் முழுமையாக உறிஞ்சுவதற்கு தடையை ஏற்படுத்துமாம்.

 தேநீரில் அதிகப்படியான நிகோடினின் தடயங்கள் இருப்பதால் உங்களது மூளையை எளிதில் வசியம் செய்யக்கூடியவை . இதனால் நீங்கள் எளிதில் தேநீருக்கு அடிமையாக்கக்கூடும்.

Sharing is caring!