வெறும் வயிற்றில் நெய் காபி குடியுங்கள்!பிறகு நடக்கும் அதிசயத்தை பாருங்க..!!

காபியில் பல வெரைட்டிகள் உள்ளன. அதில் வித்தியாசமான ஓர் காபி வகை தான் நெய் காபி.

இத்தகைய காபி இன்று உடல் எடையைக் குறைக்க நினைக்கும் ஏராளமானோர் பின்பற்றும் டயட்டினருக்கு ஏற்றது.

நெய் காபியை தயாரிக்கும் முறை
 • ஒரு டம்ளரில் காபியைத் தயாரித்து ஊற்றிக் கொள்ள வேண்டும்.
 • பின் தயாரித்த காபியின் அளவிற்கு ஏற்ப அதில் 1 அல்லது 2 டீஸ்பூன் நெய் சேர்த்து கலந்து கொண்டால், நெய் காபி தயார்.
குறிப்பு
 • நெய் காபி கீட்டோ டயட்டில் இருப்போருக்கு பரிந்துரைக்கப்படுகிறது.
 • முக்கியமாக கீட்டோ டயட்டை மேற்கொள்ளும் போது முக்கியமான ஊட்டச்சத்துக்களைப் பெற தவறாதீர்கள் மற்றும் நெய் காபியில் இருந்து முழுமையான சத்துக்களையும், நன்மைகளையும் பெற நினைத்தால், ஆரோக்கியமான உணவுகளை அவசியம் உட்கொள்ள வேண்டும்.
நெய் காபியை குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
 1. வெறும் வயிற்றில் காபியைக் குடிக்கும் பலருக்கு அசிடிட்டி பிரச்சனை ஏற்பட்டுள்ளது. ஆனால் காபியுடன் சிறிது நெய் சேர்த்துக் கொள்வதால், அசிடிட்டி குறைவதோடு, உட்காயங்களும் குறையும்.
 2. ஏனெனில் இந்த காபியில் புடைரிக் அமிலம் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளது.
 3. இது குடல் ஆரோக்கியத்திற்கு நல்லது மற்றும் ஆரோக்கியமான மெட்டபாலிசத்திற்கு உறுதுணையாக இருக்கும்.
 4. காலையில் ஒரு கப் நெய் கலந்த காபியைக் குடிப்பதால், உடலின் மெட்டபாலிச அளவு அதிகரித்து, உடல் எடையைக் குறைக்கும் வேகம் அதிகரிக்கப்படும். அதிலும் கீட்டோ டயட்டை மேற்கொள்பவராயின், எடை இழப்பு வேகமாக ஏற்படும்.
 5. ஒருவேளை நீங்கள் கீட்டோ டயட்டை மேற்கொள்ளாமல், நெய் காபியைக் குடித்தால், உடல் எடை அதிகரிக்கும். காபி திருப்தியை ஒழுங்குபடுத்துகிறது மற்றும் நெய்யில் கார்போஹைட்ரேட்டுகள் இல்லை மற்றும் ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் உள்ளன.
 6. இவை எடை இழக்க பயனுள்ளதாக இருக்கும்.
 7. நெய்யில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நரம்பு திசுக்களின் வளர்ச்சி மற்றும் செயல்பாட்டிற்கு நல்லது மற்றும் ஹார்மோன்களின் உற்பத்தியை மேம்படுத்தும். ஆகுவே காபியுடன் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து குடித்தால், அது மனநிலையை நிலையாகவும், சந்தோஷமாகவும் வைத்துக் கொள்ளும்.

Sharing is caring!