வெறும் வயிற்றில் பூண்டு டீ குடிக்கலாமா?

அன்றாடம் உணவில் சேர்க்கும் ஒரு பொருள் தான் பூண்டு. உடலைத் தாக்கும் கிருமிகளை எதிர்த்துப் போராடும் நோயெதிர்ப்பு சக்தியை வலிமையாக்கும்.

பூண்டு டீ தயாரித்தும் தினமும் குடி குடித்து வந்தால், உடலினுள் பல மாயங்கள் நிகழும். அதுவும் வெறும் வயிற்றில் குடிப்பதால் அதிக பலன் கிடைக்கும்.

பூண்டு டீ தயாரிக்க தேவையான பொருட்கள்
  • பூண்டு பற்கள் – 4 (பொடியாக நறுக்கியது)
  • தண்ணீர் – 3 கப்
  • தேன் – 2 டேபிள் ஸ்பூன்
  • எலுமிச்சை சாறு – 1/2 கப்
செய்முறை

ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி, அதில் பூண்டு பற்களைப் போட்டு நன்கு கொதிக்க வைத்து இறக்கிக் கொள்ள வேண்டும்.

பின் ஓரளவு சூடு குறைந்ததும், அதில் தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இப்போது சுவையான பூண்டு டீ தயார்.

முக்கிய குறிப்பு

பூண்டு டீயின் முழு நன்மைகளையும் பெற நினைப்பவர்கள், பூண்டு பற்களை நறுக்கிய பின் 10 நிமிடங்கள் கழித்து தான் சூடேற்ற வேண்டும்.

அளவுக்கு அதிகமாக பூண்டு உட்கொண்டால், அது குமட்டல், வாந்தி, வயிற்றுப் போக்கு, நெஞ்செரிச்சல், தலைச் சுற்றல் போன்ற சிக்கல்களை சந்திக்கக்கூடும். ஆகவே மிதமான அளவில் உட்கொள்ளுங்கள்.

நன்மைகள்
  • இன்று பலர் உயர் இரத்த அழுத்த பிரச்சனையால் அவஸ்தைப்படுகிறார்கள். அத்தகையவர்கள் பூண்டு டீயை தினமும் குடித்தால், உயர் இரத்த அழுத்த பிரச்சனையில் இருந்து விரைவில் விடுபடலாம்.
  • கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கை வகிக்கிறது.
  • ஆய்வுகளில் பூண்டில் ஆன்டி-கார்சினோஜெனிக் பண்புகள் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே பூண்டு டீயை ஒருவர் தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், பல்வேறு வகையான புற்றுநோயின் தாக்கத்தைத் தடுக்கலாம்.
  • சளி, இருமல், நெஞ்சு சளி மற்றும் இரவு நேரத்தில் தூங்க முடியாதவாறு சுவாசிப்பதில் பிரச்சனையை சந்தித்தால், பூண்டு டீயை ஒரு கப் குடியுங்கள்.
  • உடல் எடை வேகமாக குறையும். அதே சமயம் இது ஓரளவு பசியையும் அடக்கும்.
  • உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு குறைந்து, இதய ஆரோக்கியம் மேம்படும் மற்றும் நோயின்றி வாழலாம்.

Sharing is caring!