வெற்றி தரும் விநாயகர்

ஆவணி மாதம், வளர்பிறையில் வரும் சதுர்த்தி தினம் தான், விநாயகர் சதுர்த்தி தினமாக கொண்டாடப்படுகிறது.

வி என்றால், இல்லை என, அர்த்தம். நாயகன் என்றால் தலைவர். வெற்றிக்கு தலைவன் என்பதால் தான், விநாயகர் என அழைக்கிறோம்.

விக்னம் என்றால் தடை. தடையை  நீக்குபவர் என்பதால், விநாயகருக்கு விக்னேஸ்வரன் என்றும் பெயர்.

விநாயகருக்கு உரிய சடாக்ச்சர மந்திரம், ஓம் வக்ரதுண்டாய ஹீம்’ என்பதாகும்.

நாம் எந்த செயலை செய்தாலும், அது வெற்றிகரமாக முடிய விநாயகரை வழிபட வேண்டும்.

வீடு கிரகபிரவேச நிகழ்ச்சியில் முதலில் செய்யும் ஹோமம், கணபதி ஹோமம் தான்.

Sharing is caring!