வெற்றி பெற உழைக்கும் பூரம் நட்சத்திரக்காரர்கள்

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ராசியில் சிம்மத்தைக் கொண்டிருப்பார்கள். இந்த நட்சத்திரமானது இரண்டு கண்களின் கருமணிகள் போல் அமைந்த இரண்டு நட்சத்திரங்களைக் கொண்டிருக்கிறது.

பூரம் நட்சத்திரத்தின் முதல் பாதத்தைக் கொண்ட நீங்கள் சூரியனை அதிபதியாக பெற்றிருப்பீர்கள். பேச்சுத்திறமையும் செயல்திறமையும் ஒருங்கே பெற்றவர்கள்.. தோல்வி என்பதை ஏற்காமல் வெற்றியை நோக்கி போராடிவென்றும் விடுவீர்கள். இறை நம்பிக்கையை கொண்டிருப்பீர்கள். உங்களைச் சுற்றி இருப்பவர்களின் மீது அக்கறை செலுத்தும் நீங்கள் உங்கள் நலனை பெரிதாக நினைக்கமாட்டீர்கள்.

பூரம் நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தைக் கொண்ட நீங்கள் புதனை அம்சமாக கொண்டிருப்பீர்கள். எந்த விஷயத்திலும் அவ்வளவு சீக்கிரம் திருப்தி அடையமாட்டீர்கள். திறமைசாலியாக இருந்தாலும் பிறரது அரவணப்பிலேயே வாழ விரும்புவீர்கள்.  அவ்வப்போது தோல்விகளைக் கண்டு துவண்டுவிடுவீர்கள்..

பூரம் நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தைக் கொண்ட நீங்கள் சுக்கிரனை அதிபதியாக கொண்டவர்கள். கலை ஆர்வம் உடையவர்கள். பிறர்நலம் விரும்பா சுயநலவாதியாக இருப்பீர்கள். ஆனாலும் நல்ல மனம் கொண்டவர்களாக நல்லதை மட்டும் விரும்புபவர்களாகவும் இருப்பீர்கள்.

பூரம் நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தைக் கொண்டவர்களான நீங்கள் செவ்வாயை அம்சமாக கொண்டிருப்பீர்கள். திட்டமிட்டு செயலாற்றும் குணம் அறவே கிடையாது. சேமிப்பதை விட செலவழிப்பதிலேயே மிகுந்த ஈடுபாடு கொண்டிருப்பீர்கள். அவசரத்தில் செய்துவிட்டு ஆகாசத்தில் அழு என்ற பழமொழி உங்களுக்கு பொறுத்தமாகவே இருக்கும்.

பூரநட்சத்திரத்தில் நான்கு பாதங்களைச் சேர்ந்தவர்களுக்கும் பொதுவான குணநலன்கள் உண்டு. இவர்கள் கலை ஆர்வமிக்கவர்கள். சமூகத்தில் உயர்ந்த பதவியில் பேரோடும் புகழோடும் இருக்க விரும்புவார்கள். அழகிய தோற்றத்தைக் கொண்டிருந்தாலும் அழகை விரும்புவார்கள். புகழை பெறுவதற்காகவே தான தர்மங்கள் செய்வதில் விருப்பமுற்று இருப்பார்கள். தோல்வியை ஏற்காமல் வெற்றிபெற்றே தீர வேண்டும் என்று கடுமையாக உழைப்பீர்கள்.

Sharing is caring!