வெள்ளைச் சர்க்கரையை அதிகம் பயன்படுத்துவதால் உடலில் ஏற்படும் பாதிப்புக்கள்…!

வெள்ளை சர்க்கரையில் உள்ள இரசாயனங்கள் நமது உடலில் இன்சுலின் சுரப்பை பாதித்து, ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரித்து, சர்க்கரை வியாதி அல்லது நீரிழிவு நோயை ஏற்படுத்தக் கூடும். சர்க்கரையில் உள்ள சல்பர்டை ஆக்சைடு என்னும் இரசாயனம் மஞ்சள் நிறாமாக மாறி வீரியமுள்ள நஞ்சாக மாறிவிடுகின்றது.

வெள்ளை சர்க்கரையில் உள்ள அளவுக்கு அதிகமான அமிலத்தன்மையால் உடல் சோர்வடையும் அதை சமன் செய்ய எலும்புகள் மற்றும் பற்களில் உள்ள கல்சியம் சத்து உறிஞ்சப்படும். இதனால் பல் மற்றும் எலும்பு தொடர்பான நோய்கள் வந்து சேரும்.குடலில் மட்டுமல்லாமல் பல் வலி, பல் சொத்தை,குடல்புண், சளித்தொல்லை உடம்பருமன், இதய நோய், மற்றும் சர்க்கரை வியாதி இரத்தம் அழுத்தம் புற்று நோய் போன்ற பெரிய வியாதிகள் அனைத்துக்கும் இதுதான் பிரதான காரணியாக அமைகின்றது.வெள்ளை சர்க்கரையில் உள்ள இன்சுலின் உடலில் உள்ள புற்றுநோய் செல்களை வளர்ச்சியடைய செய்கிறது. தினமும் சாப்பிட்டு வருவதால் புற்றுநோய் உண்டாவதற்கு இதுவே காரணியாக இருக்கின்றது. தயத்தின் நாளங்களில் உள்காயங்களை ஏற்படுத்தி அதனால் மாரடைப்பு, பக்கவாதம் முதலியவற்றை உருவாக்குகிறது. நமது உடலில் கெட்ட கொழுப்புகளை அதிகரித்து இரத்த அழுத்தத்தை ஏற்படுத்தி இதய நோயை வலுவாக்குகிறது. சர்க்கரைக்கு பதிலாக ஆரோக்கியமான நாட்டு சர்க்கரை, வெல்லம் போன்றவற்றை பயன்படுத்துவது உடல் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றது.

Sharing is caring!