வேண்டாமே…இரவு 9 பிறகு உணவு வேண்டாம்

இரவு 9 மணிக்கு முன்னதாக இரவு உணவை கழித்துவிட்டால் மார்பக புற்றுநோயில் இருந்து தப்பிக்கலாம் என ஓர் ஆய்வு தெரிவிக்கின்றது!

இரவு உணவினை 9 மணிக்கு முன்னதாக அல்லது தூங்கச்செல்வதற்கு 2 மணிநேரம் முன்னதாக கழித்துவிடும் பட்சத்தில் மார்பக புற்றுநோயில் இருந்து தப்பிக்க 20% வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினசரி உணவு பழக்கங்களை சரிவர கடைபிடிப்பதே புற்றுநோய்கான எதிர்ப்பு நடவடிக்கை என இந்த ஆய்வின் ஆசிரியரும், ஸ்பெயினின் குளோபல் ஹெல்த் பார்சிலோனா இன்ஸ்டிடியூட் ஆஃப் குளோபல் ஹெல்த் (ISGlobal) இன் முன்னணி எழுத்தாளருமான மனோலிஸ் கோஜெவினாஸ் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆய்வின் கண்டுபிடிப்பானது உணவின் முக்கியதுவம் மற்றும் புற்றுநோய் பற்றிய ஆய்வுகள், சர்க்காடியன் தாளங்களின் மதிப்பீட்டு முக்கியத்துவம் ஆகியவற்றை மேற்கோள் காட்டியுள்ளது.

புற்றுநோய் குறித்து சர்வதேச பத்திரிகையில் வெளியிடப்பட்ட ஆய்வில், 621 நோயாளிகளுக்கு புரோஸ்டேட் புற்றுநோய் இருப்பதாகவும், 1,205 நோயாளிகளுக்கு மார்பக புற்றுநோய் இருப்பதாகவும் தெரிவிக்கின்றது. இதில் 872 பேர் ஆண் மற்றும் 1,321 பெண் எனவும் இந்த பட்டியல் தெரிவிக்கின்றது.

இந்த கணக்கின் உதவியோடு இந்த ஆய்விற்கான பங்கேற்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். பின்னர் அவர்களது உணவு நேரம், தூக்க பழக்கங்கள் மற்றும் குரோனோடைப் பற்றி ஆகியவற்றை தொடர்சியாக ஆராய்ச்சியாளர்கள் ஆராய்துள்ளனர்.

இந்த ஆய்வினை முழுமைப்படுத்த பங்கேற்பாளர்கள் தங்கள் உணவுப் பழக்கங்கள் குறித்து ஆய்வாளர்களால் கேட்கப்பட்ட கேள்விக்கும் வினா-விடை தாள் மூலம் பதில் அளித்துள்ளனர். இந்த விடைகளின் மூலம் புற்று நோயாளிகளுக்கு இரவில் 9 மணிக்கு பின்னர் அதிகஅளவில் உணவு எடுத்துக்கொள்வதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் இரவு நேரங்களில் பணிக்கு செல்பவர்களாகவும், அதன் காரணமாக நள்ளிரவில் உணவு உண்பவர்களாகவும் இருந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

இந்த ஆராய்ச்சின் முடிவில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது., இரவு நேரங்களில் அதிக நேரம் கண்விழித்து நொருக்கு தீனி தின்பவர்களுக்கும் புற்றுநோய் ஏற்படவாய்ப்புகள் உள்ளது. பெரும்பாலும் இரவு உணவின் இரவு 9 மணிக்கு முனதாக முடித்துவிட வேண்டும் எனவும், இல்லையேல் 9 மணிக்கு இரவு உணவு உண்ணும் பட்சத்தில் தங்களது உணவிற்கு பிறகு குறைந்தப்பட்சம் 2 மண்நேரம் தூக்கத்தினை தள்ளி வைக்க வேண்டும் எனவும் தெரிவிக்கின்றது.

Sharing is caring!