வேலையில் அதிக உணர்ச்சிவசப்படுபவரா நீங்கள்?

எல்லா வேலைகளும் இங்கு சமமாக உருவாக்கப்படவில்லை. சில வேலைகள் அதிக உடல் உழைப்பை கோருகின்றன. பிற வேலைகள் அதிகமாக உணர்ச்சிவசப்பட வைக்கப்படுகின்றன. உதாரணமாக, சமூக சேவையாளர்கள், மனநல மருத்துவர்கள், பத்திரிக்கையாளர்கள் மற்றும் குடும்ப சிகிச்சையாளர்கள் என ஒவ்வொரு நாளும் மற்றவர்களின் போராட்டங்களைப் பார்க்கிறார்கள், கேட்கிறார்கள்.

அறுவை சிகிச்சை நிபுணர்கள் மற்றும் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் போன்ற பிற வேலைகளில் அதிகளவு மன அழுத்தத்தை ஏற்படுத்தும். உண்மையில், சொல்லப்போனால் எந்தவொரு வேலையும் சூழலை பொறுத்து உணர்ச்சி ரீதியாக மன அழுத்தத்தை ஏற்படுத்தும். உணர்ச்சிவசப்படக்கூடிய சில வேலைகளால் உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கும் மன ஆரோக்கியத்திற்கும் பாதிப்பு ஏற்படுகிறது.

ஆரோக்கியத்திற்கான பாதை
வேலையில் அதிக உணர்ச்சிவசப்படுபவர்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. அதிக உணர்ச்சிவசப்படுபவராக இருந்தால் கண்டிப்பாக மன அழுத்தம் உருவாகும். இதனால் உங்களால் உணவை கூட உங்களால் சரிவர சாப்பிட முடியாமல் போகும். மன அழுத்தம் காரணமாக இரத்த அழுத்தம் அதிகரிக்கவும் அதிக வாய்ப்புள்ளது. மேலும், அதீத தலைவலி, வயிற்று வலி, மயக்கம் மற்றும் அதிக கொழுப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.

ஏற்கனவே வேறு நோயால் நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தால், உங்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தால் அவற்றை கட்டுப்படுத்துவது கடினம். உதாரணமாக, நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த தேவையான மருந்து மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களை மேற்கொள்ள இருக்கும் நீங்கள் மன அழுத்தம் காரணமாக அதைப் புறக்கணிக்கக்கூடும்.

செய்ய வேண்டிய விஷயங்கள்
நீங்கள் நிறைய உணர்ச்சிவசப்பட்டக்கூடிய வேலையிலிருந்தால், உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்படும் பாதிப்பைக் குறைக்க நீங்கள் செய்யக்கூடிய சில விஷயங்கள் உள்ளன. முதலில், மன அழுத்தத்துடன் இருப்பதாக ஒப்புக்கொள்ளுங்கள்.

உங்கள் உடல் ஆரோக்கியத்தை நீங்கள் கவனித்துக்கொள்வதற்கான ஒரே வழி, மன அழுத்தத்திலிருந்து வெளிவர வேண்டும். உங்களின் இந்த வேலையினால் உருவாகும் மன அழுத்தத்தினால் அதிக ஆபத்து ஏற்படக்கூடும் என்பதை உணர வேண்டும். உடல் ரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் உங்களை கவனித்து கொள்ள வேண்டும்.

அணுகுமுறையை மாற்ற வேண்டும்
நாம் செய்வது ஒரு வேலை என்பதை நீங்கள் முதலில் நினைவுகொள்ளுங்கள். மற்றவர்களின் பிரச்சினைகள், கோபம் மற்றும் மனக்கசப்பு ஆகியவற்றைக் கையாள்வது உங்கள் வேலை என்றாலும், அவர்களின் பிரச்சினைகள் உங்களுடையதாக மாற அனுமதிக்காதீர்கள். உங்கள் சொந்த வாழ்க்கையில் உள்ள நல்லதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் ஏற்படும் மகிழ்ச்சிகரமான தருணங்களை அடிக்கடி நினைவில் கொள்ளுங்கள். அது உங்கள் மனதில் நிம்மதியளிக்கும்.

நன்றாக சாப்பிடுங்கள்
பெரும்பாலானோர் செய்யும் ஒரு தவறு, மன உளைச்சலின்போது சாப்பாட்டை புறக்கணிப்பது. மேலும் பல ஆரோக்கியமான உணவுகளையும் புறக்கணிக்க முனைகிறார்கள். மன அழுத்த நேரத்தில் சாப்பிடாமல் இருப்பதால், உடலுக்கு தேவையான சத்துகள் கிடைக்காமல் ஆரோக்கியத்தில் குறைபாடு ஏற்படும். உடலுக்கு தேவையான வலு கிடைக்காமல் உடலும் நலிவடைய ஆரம்பிக்கும். அதனால் ஆரோக்கியமான உணவுகளைத் தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும்.

உடற்பயிற்சி
மன ஆரோக்கியத்திற்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் உடற்பயிற்சி இன்றியமையாதது. ஒவ்வொரு நாளும் குறைந்தது 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்யுங்கள். முடிந்தால், நீங்கள் வேலையை விட்டு வெளியேறியவுடன் உடற்பயிற்சி செய்யுங்கள். இது உடனடியாக மன அழுத்தத்திலிருந்து உங்களை விடுபட உதவும். ஒரே இடத்தில் அமர்ந்திருக்காமல் கொஞ்சம் நடைப்பயிற்சி செய்யுங்கள். வெளிப்புறச் சூழல், இயற்கை என உங்கள் மனம் அமைதியை நாடும்.

தியானம் செய்யுங்கள்
அமைதியான இயற்கை சூழலில் அமர்ந்து தியானம் செய்யுங்கள். நிதானமாக ஏதாவது சிந்தித்துப் பிரதிபலிக்க 30 நிமிடங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் மனதை ஆச்சரியப்படுத்தவோ அல்லது உங்கள் மன அழுத்தத்திற்கு திரும்பவோ வந்துவிடாதீர்கள். அனுபவத்தை இன்னும் நிதானமாக மாற்ற ஆழ்ந்த சுவாச பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள்.இதுபோன்ற அமைதியான தியானம் மன அழுத்தம் மற்றும் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது.

புதிய காற்று மற்றும் சூரிய ஒளியை பெறுங்கள்
இது மிக எளிமையானதாக உங்களுக்கு தோன்றலாம். ஆனால், புதிய காற்று மற்றும் சூரிய ஒளி உங்கள் ஆரோக்கியத்திற்கு தேவையான அதிசயங்களைச் செய்யலாம். உங்கள் மனநிலையை மேம்படுத்த இவை இரண்டும் உதவியாக இருக்கும். கூடுதலாக, காலை நேர சூரிய ஒளியில் வைட்டமின் டி உள்ளது. வைட்டமின் டி உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது. தினமும் காலை நேரம் சூரிய ஒளியில் இயற்கையான சூழலில் நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள்.

மது அருந்துவதைக் குறைக்கவும்
வேலையில் ஒரு மன அழுத்தம் நிறைந்த நாளுக்குப் பிறகு மது அருந்தலாம். மது அருந்துவதால் மன உளைச்சல் திரூம் என நினைத்து அதிகமாக மது அருந்துவது உடல் ஆரோக்கிய பிரச்சினைகளை ஏற்படுத்தும். அதுமட்டுமல்லாமல் இவை போதைக்கும் வழிவகுக்கும்.

சுகாதார நிலைமைகளைப் பார்க்க வேண்டும்
உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், ஒற்றை தலைவலி அல்லது வேறு வகையான நாட்பட்ட நோயால் நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தால், உங்கள் மருத்துவரின் கட்டளைப்படி மருந்து மற்றும் சிகிச்சைகளை பின்பற்ற வேண்டும். அதிகமாக உணர்ச்சிவசப்படக்கூடியதாக வேலை இருந்தால், ஒரு புதிய வேலையைத் தேடுங்கள். அல்லது புதிய தொழில் தொடங்குங்கள். மன அழுத்தம் குறைவாக உள்ள வேலையில் சேருங்கள். நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு இது நல்லது.

யாரிடமாவது உரையாடுங்கள்
நிறைய உணர்ச்சிவசப்படக்கூடிய வேலை செய்யும்போது, உங்கள் மனதை அமைதிப்படுத்த உங்கள் தொலைப்பேசியை அணைத்து, மடிக்கணினியை மூடிவிட்டு, அவற்றை வேறு அறையில் வைத்துவிடுங்கள். வேறு யாரிடமாவது உரையாடுங்கள். நகைச்சுவையாக பேசுங்கள். மன அழுத்தத்தைக் குறைக்க நன்றாக வாய்விட்டு மகிழ்ச்சியாக அனைவரிடமும் பேச வேண்டும்.

கருத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்
உணர்ச்சிவசப்படக்கூடிய வேலைகள் உங்கள் மன ஆரோக்கியத்தை பாதிக்கும். இந்த வகை வேலை அழுத்தங்களைக் கொண்ட ஊழியர்கள் இதை கட்டுப்படுத்தாமல் விட்டுவிட்டால் மனச்சோர்வு மற்றும் பதட்டம் ஏற்படும் அபாயம் அதிகம். இவ்வாறு வேலை செய்து உங்களை மட்டுமல்லாமல் உங்கள் உறவினர்களையும் பாதிக்கும்.

புத்துணர்ச்சியுடனும் நிதானத்துடனும் நீங்கள் வேலையில் ஈடுபட வேண்டும். மேலும், உங்கள் குடும்பத்தினருடன் உணர்ச்சிப்பூர்வமான கலந்துரையாடல்கள் நடத்துவதும் முக்கியம். அவர்களுடன் நல்ல உரையாடல் வெளியில் செல்வது போன்ற பொழுதுபோக்குகளை மேற்கொள்ளும்போது உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட வாய்ப்பு குறைவாக இருக்கும்.

Sharing is caring!