ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலின் அதிசயங்களும்…ரகசியங்களும்…!

இந்தியாவிலே, திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் தான் ,7 பிரகாரங்களுடன் அமைக்கப்பட்ட கோவிலாகும்.
11 ஆழ்வார்கள் மங்களாசாசனம் பெற்று பாடிய ஒரே தலம். இங்கு, ரங்கநாதர், பாற்கடலில் பள்ளி கொண்ட கோலத்தில் காட்சி தருகிறார்.108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானது. கோவிலை சுற்றி 21 கோபுரங்கள் உள்ளது.

ஆசியாவிலேயே மிக உயரமான கோபுரம் என்ற பெருமைக்குரியது ஸ்ரீரங்கம் ராஜகோபுரமாகும். இதன் உயரம் 236 அடி, 13 நிலைகளுடன், 13 கலசங்களுடன் கம்பீரமாய் காட்சி அளிக்கிறது .
திருவரங்கத்தில் இருக்கும் ‘ரங்க விமானம்” ஆதியில் தானாகவே உருவானது. இதைச் சுற்றி 24 கி.மீ. தூரத்துக்குள் எங்கே இருந்தாலும், முக்தி நிச்சயம். இந்த விமானம் பொன்னால் வேயப்பட்டு ‘ஓம்” என்கிற பிரணவ வடிவில் அமைந்துள்ளது.

பாண்டிய மன்னர்களில் சிறந்தவனான சுந்தர பாண்டியன் காணிக்கையாக அளித்த கிரீடம் பாண்டியன் கொண்டை என்று இன்றும் சிறப்பாக நம்பெருமாளுக்கு அணிவிக்கப்படுகிறது.

பெருமாளின் 108 திருப்பதிகளில் தெற்கு நோக்கி அமைந்த தலங்கள் இரண்டே இரண்டு தான். முதல் தலமான ஸ்ரீரங்கமும், 11-வது தலமான திருச்சிறுபுலியு ருமே அந்த திருத்தலங்கள்…

திருப்பாணாழ்வார் மீது அர்ச்சகர் ஒருவர் கல் எறிந்தபோது, சுவாமி தன் நெற்றியில் ரத்தம் வழிய நின்று, ஆழ்வாருக்கு மோட்சம் கொடுத்த தலம் இது.

கவிச்சக்கரவர்த்தி கம்பன், தன் உன்னதப் படைப்பான ‘ராமாவதாரம்’ என்ற ராமாயணக் காப்பியத்தை அரங்கேற்றம் செய்ய, ஸ்ரீரங்கத்தையே தேர்ந்தெடுத்தான்.

 ஸ்ரீரங்கம் தாயார் சன்னிதி அருகே கோயில் கொண்ட நரசிம்மர் சன்னிதியில்தான் ,கம்பன் தன் காவியத்தை அரங்கேற்றினான்.

Sharing is caring!