ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் ‛ஹோம்மேட்’ ஹல்வா!

ஆண், பெண் இருபாலருக்கும் ரத்தத்தில் ஹீமோகுளோபின் சரியான அளவில் இருப்பது மிக மிக அவசியம். குறிப்பாக குழந்தைகள் மற்றும் பெண்களில் பெரும்பாலானோருக்கு ஹீமாகுளோபின் அளவு குறைவதால் ரத்த சோகை, உடல் சோர்வு உள்ளிட்ட பிரச்னைகளை சந்திக்க நேரிடுகிறது.

முதலில் ஹீமோகுளாபின் அப்படினா என்னனு தெரிஞ்சுக்கலாம்.. ‘ஹீம்’ என்றால் ‘இரும்பு’ என்று அர்த்தம். ரத்தத்தில் உள்ள இரும்பு சத்தின் அளவை குறிப்பதுதான் ஹீமோகுளோபின்.  நாம் எடுத்துக்கொள்ளும் உணவில் இரும்பு சத்து அதிகளவில் இருந்தால், ரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியும் அதிகரிக்கும்.  இந்த இரும்பு சத்தின் அளவை அதிகரிக்க, சத்து மாத்திரைகளை சாப்பிடுவதை விட, இயற்கையில் விளையும் மாதுளம், பேரீச்சை உள்ளிட்ட பழங்களை சாப்பிடுவது சாலச்சிறந்தது. இதைத்தான் டாக்டர்களும் கூட அறிவுருத்துகின்றனர்.

குறிப்பாக பேரீச்சம் பழத்தில், இரும்பு சத்து அதிகம் இருப்பதால், தினமும் அதை சாப்பிடும் நபர்களுக்கு ஹீமோகுளோபின்  அளவை சமன்படுத்த முடியும். அத்துடன், கால்சியம் சத்துக்கு தேவையான பாலும் குடிப்பதால், கால்சியம், அயர்ன் சத்துக்கள் சம விகிதத்தில் கிடைக்கும்.


இந்த இரண்டையும் பெரியவர்கள் மிக எளிதாக சாப்பிட்டுவிடுவர். ஆனால், குழந்தைகளை பால் குடிக்க வைக்கவும் சரி, பேரீச்சம் பழத்தை சாப்பிட வைக்கவும் சரி படாத பாடு பட வேண்டியிருக்கும். அதற்கு பதிலாக, இவை இரண்டும் கலந்த கலவையில், ஹோம் மேட் ஹல்வா செய்து கொடுத்தால், குழந்தைகளும் அதை விரும்பி சாப்பிடும்.அவர்களுக்கு தேவையான சத்துக்களும் கிடைக்கும்.

தேவையான பொருட்கள்: பேரீச்சம் பழங்கள், நெய், பால், முந்திரி, பாதாம், ஏலக்காய்.

Sharing is caring!