அதுவும் இந்த சுரப்பியில் இரு வகையான பிரச்சனைகள் வரும். அவை ஹைப்போ தைராய்டு மற்றும் ஹைப்பர் தைராய்டு ஆகும்.
இப்பிரச்சனையை தடுக்க சில இயற்கையான வழிகள் உள்ளது.
தைராய்டு பிரச்சனையை போக்கும் வழிகள்

சில துளிகள் ரோஸ்மேரி ஆயிலை நீர் நிரப்பிய குளியல் டப்பில் கலந்து, அதனுள் 15-20 நிமிடம் உட்கார வேண்டும். இதை தினமும் செய்து வந்தால் விரைவில் ஹைப்போ தைராய்டு பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

1 டேபிள் ஸ்பூன் ஆளி விதை பொடியை ஒரு டம்ளர் பால் அல்லது பழச்சாறுடன் சேர்த்து குடிக்க வேண்டும். இப்படி தினமும் 1-2 முறை குடித்து வர வேண்டும்.

தினமும் 1-2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஆனால் தேங்காய் எண்ணெயை சூடேற்றக் கூடாது.

ஒரு கப் நீரில் சிறிதளவு இஞ்சியைத் தட்டிப் போட்டு 5-10 நிமிடம் கொதிக்க வைத்து வடிகட்டி, குளிர்ந்த பின் தேன் சேர்த்து கலந்து தினமும் 3 முறை குடிக்க வேண்டும்.

ஹைப்போ தைராய்டு பிரச்சனை வராமல் தடுக்க சிட்ரஸ் பழங்கள், பச்சை இலைக் காய்கறிகள், மீன், இறைச்சி, முட்டைகள் மற்றும் பால் பொருட்கள் போன்றவற்றை அதிகம் சாப்பிட வேண்டும்.

ஒரு டம்ளர் நீரில் 2-3 துளிகள் கருப்பு வால்நட்ஸ் ஓட்டின் சாற்றினை கலந்து குடிக்க வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 2-3 முறை என நல்ல மாற்றம் தெரியும்.