48 நாட்களில் சக்கரை நோயை ஓட ஓட விரட்டலாம்!

வெந்தயம், பாகற்காய் போலவே கற்றாழையும் அற்புத பலன்களை சக்கரை வியாதிக்கு தருகிறது. கற்றாழை எல்லா இடங்களிலும் கிடைக்கும். வீட்டிலேயே வளர்க்கலாம். குடல், கல்லீரல், சக்கரை சம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்தும்.

கற்றாழையிலுள்ள சத்துக்கள்
  • விட்டமின் ஏ, ஈ, சி, பி1, பி2, பி3, பி6, பி12, மற்றும் மினரல்கள் உள்ளது.
  • அதிகமாக அமினோ அமிலங்கள் இருப்பதால் சரும பாதிப்புகளை குணப்படுத்தும்.
  • இதில் அதிகமாக இரும்பு மற்றும் காப்பர் இருப்பதால் புண்களை ஆற்றும்.

கற்றாழை இதய பாதிப்புகளையும் வராமல் தடுக்கிறது. அதிலுள்ள நார்ச்சத்துக்கள் இதயத்தில் படியும் கொழுப்புகளை கரைக்கிறது. இதனால் இதய நோய்கள் தடுக்கப்படுகிறது.

கற்றாழையை எப்படி உணவில் எடுத்துக் கொள்வது?

கற்றாழையின் சதைப் பகுதியை எடுத்து நன்றாக கழுவிக் கொள்ள வேண்டும். குறைந்தது 6 முறை ஓடும் தண்ணீரில் கழுவுங்கள். பின்னர் அதனை சாப்பிடலாம். ஆரம்பத்தில் 1 ஸ்பூன் எடுத்துக் கொள்ளுங்கள்.

போகப் போக தினமும் 3 ஸ்பூன் வரை கற்றாழையை எடுத்துக் கொள்ள வேண்டும். இது மிகவும் ஆற்றல் மிக்க இயற்கை மருந்தாகும். கற்றாழையை ஜூஸாகவும் எடுத்துக் கொள்ளலாம். இதுவும் மிக எளிது.

கற்றாழை மருந்து

பிரியாணி இலையை பொடி செய்து அதனுடன் சிறிது மஞ்சள் தூள், 2 ஸ்பூன் கற்றாழையின் ஜெல் போன்றவற்றை கலந்து சாப்பிட வேண்டும். காலை இரவு என உணவிற்கு பின் இந்த மருந்தை உட்கொள்ள வேண்டும். சர்க்கரை உயராமல் இருக்கும்.

மூலிகை கசாயம்

துளசி, வில்வம், வேப்பிலை, நெல்லி ஆகியவற்றை காய வைத்து எல்லாம் கலந்து பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் நீரில் இந்த பொடியை சேர்த்து காற்றாழை ஜெல்லை 1 ஸ்பூன் சேர்த்து நன்றாக காய்ச்சி வடிகட்டி குடிக்க வேண்டும்.

கற்றாழை ஜூஸ்
தேவையானவை
  • கற்றாழை – ஒரு முழு இலை
  • நீர்- 3 கப்
செய்முறை

கற்றாழை இலையை இரண்டாக பிரித்து அதிலிருக்கும் ஜெல்லை ஒரு ஸ்பூனால் வழித்து எடுத்துக் கொள்ளுங்கல். அதனை நன்றாக கழுவிய பின் அதனை மிக்ஸியில் ஒரு அடி அடித்த பின் நீர் கலந்து மீண்டும் மிக்ஸியில் அடியுங்கள். நன்றாக இரண்டும் கலக்கும் வரை அரைத்துக் கொள்ளவும். கற்றாழை ஜூஸ் ரெடி.

இதில் விருப்பமிருந்தால் எலுமிச்சை சாறு அல்லது இஞ்சிச் சாறு கலந்து கொள்ளலாம்.

தொடர்ந்து 48 நாட்கள் இந்த சோற்றுக் கற்றாழையை ஜெல்லை மட்டும் எடுத்து 7 தடவைக்குக் குறையாமல் தண்ணீரில் கழுவி பனங்கற்கண்டோடு கலந்து சாப்பிட சர்க்கரை வியாதி ஓடியே போய்விடும்.

Sharing is caring!