5 நாட்களில் 3 கிலோ எடையைக் குறைக்க உதவும் ஓர் அற்புதமான உணவுப் பொருள்!

உடல் எடையைக் குறைக்க பல்வேறு டயட்டுகள் உள்ளன. எனினும், அனைவருக்குமே அனைத்து டயட்டும் நல்ல பலனைத் தரும் என்று கூற முடியாது.

ஆனால், ஒரு சில டயட்டுக்கள் பொதுவானதாக இருக்கும். ஒழுங்கான முறையில் மேற்கொண்டால் நல்ல மாற்றத்தினை உணர முடியும்.

உடல் எடையைக் குறைக்க உதவும் ஓர் அற்புதமான உணவுப் பொருள் தான் பசலைக்கீரை. பசலைக்கீரையை முக்கியமாக கொண்ட டயட்டை ஒருவர் மேற்கொண்டால், ஐந்து நாட்களில் 3 கிலோ எடையைக் குறைக்கலாம்.

நாள் 1
காலை உணவு
1 வேக வைத்த முட்டை, 2 தக்காளி மற்றும் பசலைக்கீரையுடன் எலுமிச்சை சாறு மற்றும் ஆலிவ் ஆயில் சேர்க்கப்பட்ட சாலட், 2 துண்டு முழு தானிய பிரட்.

மதிய உணவு
க்ரில் சிக்கன், பசலைக்கீரை சூப்.

இரவு உணவு
பசலைக்கீரையுடன் மற்ற காய்கறிகள் சேர்த்து தயாரிக்கப்பட்ட சாலட்.

நாள் 2
காலை உணவு
ஓட்ஸ் உடன் யோகர்ட், இனிப்பில்லாத டீ.

மதிய உணவு
பசலைக்கீரை சூப்.

இரவு உணவு
பசலைக்கீரை மற்றும் ஆரஞ்சு சூப்.

நாள் 3
காலை உணவு
பசலைக்கீரை ஆம்லெட், 1 துண்டு முழு தானிய பிரட்.

மதிய உணவு
மீன், பசலைக்கீரை மற்றும் சாதம்.

இரவு உணவு
வேக வைத்த பசலைக்கீரை மற்றும் 2 ஆரஞ்சு பழங்கள்.

நாள் 4
காலை உணவு
பசலைக்கீரை, ஆப்பிள் மற்றும் கேரட் ஜூஸ்.

மதிய உணவு
சிக்கன் அல்லது மீன், பசலைக்கீரை சாலட்.

இரவு உணவு
பசலைக்கீரை மசாலா சாதம்.

நாள் 5
காலை உணவு
2 வேக வைத்த முட்டை, ஒரு பௌல் யோகர்ட்.

மதிய உணவு
சிக்கன் அல்லது மீன் மற்றும் பசலைக்கீரை.

இரவு உணவு
விருப்பமான பழச்சாறு.

முக்கிய குறிப்பு
முக்கியமாக எந்த ஒரு டயட்டை மேற்கொள்ளும் போதும், ஜங்க் உணவுகள், சர்க்கரை உணவுகள், எண்ணெயில் பொரித்த உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்பதை மறக்க வேண்டாம்.

Sharing is caring!