5 ராசிகளில் பிறந்த பெண்களை காதலித்தல் அதிர்ஷ்டம் உங்களுக்கு

காதலில் பர்பெக்ட்டாக யாராலும் இருக்க முடியாது, ஆனால் சிறந்த காதலராக இருக்க முடியும். சிறந்த காதலராக இருக்க தனித்திறமைகள் எதுவும் தேவையில்லை. தங்கள் துணையின் தேவைகளை புரிந்து அவர்களை காயப்படுத்தாத வண்ணம் நடந்து கொண்டாலே போதும். ஆனால் பல காதலர்கள் இதில்தான் சறுக்குகின்றனர். குறிப்பாக பெண்கள் இந்த தவறை அதிகம் செய்கின்றனர்.

சில பெண்கள் இதற்கு நேர்மாறாக சிறந்த காதலிகளாக விளங்குகின்றனர். இதற்கு அவர்களின் ராசி அவர்களின் செயல்கள் மீது ஏற்படுத்தும் தாக்கமும் ஒரு முக்கிய காரணமாகும். இதன்படி சில குறிப்பிட்ட ராசிகளில் பிறந்த பெண்கள் மிகச்சிறந்த காதலிகளாக இருக்க வாய்ப்புள்ளது. இந்த பதிவில் எந்தெந்த ராசியில் பிறந்த பெண்களுக்கு இந்த சிறப்பு குணம் இருக்குமென்று பார்க்கலாம். பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

மீனம்: பெண்மை, கற்பனைத்திறன், உணர்ச்சிகள் போன்றவை மீன ராசி பெண்களின் அற்புத குணங்களாகும். எனவே அவர்கள் இந்த வரிசையில் முதலிடத்தில் இருப்பதில் ஆச்சரியமில்லை. இவர்கள் டிஎன்ஏ விலேயே காதல் கலந்துள்ளது. இவர்கள் எளிமையான மற்றும் சாதாரண தருணத்தைக் கூட அசாதாரணமான நினைவாக மாற்ற முயலும். இவர்களின் அனுதாப குணம்தான் இவர்களின் மோசமான குணம் அதேசமயம் இவர்களின் சிறந்த குணமும் இதுதான். தாங்கள் யார் மீது அக்கறையாக இருக்கிறோமோ அவர்களுக்காக எந்த தருணத்திலும் துணையாக இருப்பார்கள். துரதிர்ஷ்டவசமாக இவர்களுக்கு இவர்கள் கொடுக்கும் அளவிற்ககு அன்பு திரும்ப கிடைப்பதில்லை.வாழ்க்கை மற்றும் காதல் மீது இவர்களுக்கு சிறந்த புரிதல் இருக்கும். தன்னை உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் புரிந்து கொள்ளும் ஆணை இவர்கள் விரும்புவார்கள்.

தனுசு: நட்பு மற்றும் எதையும் எளிதாக எடுத்துக்கொள்ளும் குணம், நேர்மறையான அணுகுமுறை போன்றவை தனுசு ராசி பெண்களை ஆண்களின் கனவு தேவைதைகளாக மாற்றுகிறது. இவர்கள் எப்பொழுதும் நேர்மறையாக சிந்திப்பார்கள், எந்தவொரு சூழ்நிலையிலும் இருக்கும் சாதகமான சூழ்நிலையைதான் இவர்கள் பார்ப்பார்கள். தங்கள் காதலனின் வாழ்க்கையில் இவர்கள் ஒளிவிளக்காக இருப்பார்கள். அனைத்து தருணத்தையும் தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டு அதனை சாகசமாக முடிப்பார்கள். தங்கள் காதலனின் சுதந்திரத்தில் இவர்கள் ஒருபோதும் தலையிடமாட்டார்கள், அதேபோல்தான் தங்களின் சுதந்திரத்தையும் பாதுகாக்க நினைப்பார்கள்.

துலாம்: அன்பு, கருணை மற்றும் பரஸ்பர மரியாதை ஆகியவை உறவில் துலாம் எதிர்பார்க்கும் மூன்று முக்கிய விஷயங்கள் ஏனெனில் இவர்கள் இந்த குணங்கள் அனைத்தும் நிறைந்தவர்கள். இவர்கள் இருக்கும் உறவில் எப்பொழுதும் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். இவர்களின் புரிந்துணர்வு இவர்களை மிகச்சிறந்த காதலியாக மாற்றுகிறது. எந்தவொரு முடிவையும் எடுக்கும் முன் தங்கள் காதலனின் நிலையில் இருந்து இவர்கள் சிந்தித்து பார்ப்பார்கள். இவர்களின் காதலில் பெரும்பாலும் சண்டைகளோ, வாக்குவாதங்களோ இருக்காது. துலாம் ராசிக்காரர்கள் தங்களை நோக்கி வரும் பிரச்சினையை சமாளிக்க கற்றுக்கொள்ள வேண்டும். அமைதியாக இருப்பது ஒருபோதும் நல்ல தீர்வாகாது. அழகு, கவர்ச்சி, நகைச்சுவை உணர்வு என அனைத்தும் நிறைந்த சரியான கலவை இவர்கள்.

மகர ராசி: பெண்கள் எப்பொழுதும் தங்கள் காதலனுக்கு பக்க பலமாக இருப்பார்கள். தங்கள் காதலனைத் தாண்டி எதையும் இவர்கள் சிந்திக்க மாட்டார்கள். இவர்களின் மீது சந்தேகப்பட வேண்டிய சூழ்நிலை இவர்களின் காதலருக்கு ஒருபோதும் நேராது. ஏனெனில் இவர்கள் விசுவாசத்திற்கும், நேர்மைக்கும் புகழ் பெற்றவர்கள். காதலில் மகிழ்ச்சியாக இருக்கவும், காதலரை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளவும் இவர்கள் எப்போதும் திட்டத்துடன் தயாராக இருப்பார்கள். துரதிர்ஷ்டவசமாக இவர்கள் எப்பொழுதும் தவறான ஆண்களையே காதலராக தேர்வு செய்வார்கள். இவர்கள் காதலிப்பதில் பாதி கூட இவர்களுக்கு திரும்ப கிடைப்பதில்லை. இவர்களின் அன்பை புரிந்து கொள்ளும் ஆண் கிடைத்துவிட்டால் அவரை விட அதிர்ஷ்டசாலி வேறு யாரும் இல்லை.

மிதுனம்: மிதுன ராசி பெண்கள் இயற்கையாகவே அதிகம் பேசும் குணம் கொண்டவர்கள். இவர்களின் காதல் சுவாரஸ்யமானதாக இருக்க இது ஒரு முக்கிய காரணமாகும். தவறான விளக்கங்கள் மற்றும் தவறான அனுமானங்களிலிருந்து உறவைக் காப்பாற்றுவதற்கான சிறந்த வழி அதனைப் பற்றி பேசுவதுதான் என்று அவர் நம்புகிறார். இதனால், சண்டைகள் எளிதில் தீர்க்கப்படும். அவர்களின் பேச்சுத் தன்மை அவளைச் சுற்றி வேடிக்கையாக இருக்கிறது. அவள் திறந்த மற்றும் நேசமான, புத்திசாலித்தனம் நிறைந்த இவர்களுக்கு அறிமுகமில்லாத எந்த தலைப்பும் இல்லை. இவர்களின் விளையாட்டுத்தனத்தை ரசிக்கும் குணம் கொண்ட காதலன் கிடைத்துவிட்டால் அவரின் காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சிக்கு பஞ்சமே இருக்காது.

Sharing is caring!