7 மாத குழந்தைக்கு மண்சட்டி சோறே சிறந்தது

பிறந்த குழந்தைக்கு போஷாக்கான உணவு என்றால் தாய்ப்பால் மட்டுமே… குறிப்பிட்ட சில மாதங்கள் வரை தாய்ப்பால் தவிர வேறு எந்த உணவும்  குழந்தைக்குபோதிய சத்துக்களை கொடுத்துவிடாது. ஆனால் தற்போது  இளம் தாய்மார்கள் போதிய சத்தின்றி இருப்பதால் குழந்தைக்கு தேவை யான தாய்ப்பாலின் அளவும் குறைந்துவிட்டது. அதற்கு ஈடாக பவுடர் பால்களைத் தருவதும் ஆங்காங்கே நடைபெறுகிறது.

நமக்கு முந்தையை மூத்த தலைமுறையில் குழந்தைகள் 5 மாதங்கள் எட்டிவிட்டாலே மிருதுவான செரிமானம் ஆகக்கூடிய இட்லி போன்ற உணவுகளைக் கொடுக்கதொடங்குவார்கள்.  இது  ஒருபுறம் இருக்க  குழந் தைகள் வளரும் போது போதிய சத்துக்களோடு இல்லாமல் வைட்டமின் குறைபாடுகளைக் கொண்டிருப்பதும் அதிகரித்து வருகிறது. இதைத் தவிர்க்க குழந்தைகளுக்கு 7 மாதங்கள் ஆகும் போதே… அனைத்து காய்க றிகளும் கலந்த உணவை சிறிது சிறிதாக கொடுப்பது குழந்தைகளின் ஆரோக்யத்தைக் காக்கும்.

”அதற்குதான் தினம் ஒரு காய்கறியும், சாதமும் கலந்து மிக்ஸியில் மைய அரைத்து ஊட்டுகிறோமே” என்று சொல்பவர்கள்  முதலில் தெரிந்துகொள்ள வேண்டியது.. நாம் கொடுக்கும் உணவுகள் குழந்தைகளுக்குத் தேவையான சத்தைச்  சரிவிகிதமாகக் கொடுக்கிறதா என்பதைத்தான். அடுத்து கொடுக் கும் முறையிலும் வேறுபாடு உண்டு.

குழந்தைக்கு இட்லி தவிர்த்து   அரிசி சாதம் கொடுக்கும் போது.. சிலிகான் பூசாத   சிறிய மண் சட்டியைப் பயன்படுத்துவது நல்லது. சட்டியில்  நான்கு டீஸ்பூன் அரிசி, ஒரு டீஸ்பூம்  துவரம் பருப்பு, சிறுதுண்டு உருளைக்கிழங்கு/ கேரட்/ பீட்ரூட்/அரை வேக்காட்டில் வேகவைத்த கொண்டைக்கடலை, கறுப்பு கடலை(5 எண்ணிக்கை)….. ஏதேனும் ஒன்று சேர்த்து, நான்கு சீரகம், அரை மிளகு சேர்த்து தேவையான நீர் விட்டு நன்றாக குழைய வேகவைத்து மத்தால் மசித்து உப்பு,  விரலில் நெய் தொட்டு  மசித்த சாதத்தில்  தோய்த்து குழந்தைக்கு கொடுக்க வேண்டும். குழந்தைக்கு 2 வயதாகும் வரையில் இப்படி  மண்சட்டியில் சமைத்துக்கொடுத்தால் குழந்தைகளின் ஆரோக் யத்தில் பஞ்சமே இருக்காது.

குழந்தைகளுக்கு மண்சட்டியில் சமைத்து கொடுக்கும் உணவுகள்  அவர்களுக்கு வேண்டிய சத்துக்களை  இழக்காமல் கொடுக்கும். மேலும் மண்சட்டியில் பயன்படுத்தும் போது காய்கறியில் உள்ள சத்துக்கள் சிதையாமல் காக்கப்படுகிறது. ருசியும் கூடுகிறது.  மண்சட்டியில் வைக்கப்படும் கீரை மசியல்,மீன் குழம்பு, காரக்குழம்பு ருசி வேறு எந்த பாத்திரமும் தராது என்று பாட்டிகள் சொல்வார்கள்.

மண்சட்டி உணவு ருசி தனியாக இருக்கும்.  குழந்தைகளின் நாக்கில் இந்த  சுவை பழகிவிட்டால் வளர்ந்த பிறகு எல்லா காய்கறிகளையும் ஒதுக்காமல் சாப்பிடுவார்கள். ஆறுசுவைகளையும் வளரும்போதே பழக்கினால் குழந்தைகள் வளர்ந்த பிறகும்  ஆரோக்யம் குறையாமல் இருப்பார்கள்.

Sharing is caring!