72 மணினேரத்தில் கல்லீரலை சுத்தம் செய்து உடல் எடையை குறைக்க!

சர்க்கரை நோயாளிகள் கால்களை பாதுகாப்பது எப்படி?

சர்க்கரை நோயாளிகளுக்கு முதலில் பாதிக்கப்படுவது கால்கள் தான், குறிப்பாக பாதத்தில் உணர்ச்சிகள் குறைந்து, நரம்புகள் பாதிப்படையும்.

மேலும், அப்பகுதியில் மீண்டும் மீண்டும் அசைவு கொடுப்பதால் அழுத்தம் ஏற்பட்டு புண் பெரிதாகும்.

காலில் புண் ஏற்படும்போது முதலில் கால் நரம்புகள் பாதிக்கப்படும். அதன் பின்னர், அப்பகுதியில் அழற்சி ஏற்படும்.

அதனை கண்டுகொள்ளாமல் விட்டால், பாதிப்புகள் தீவிரமடைந்து தசைகளின் செயல்பாடுகள் தடைபடும்.

இதனால் காலை ஊன்ற முடியாத நிலை ஏற்படும். கால் ஆணி, பாத வெடிப்பு, தடிப்புகள் உள்ளவர்கள் மருத்துவரை உடனடியாக அணுக வேண்டும்.

இத்தகைய பிரச்சனைகள் உள்ளவர்கள்,

தினமும் கால்களை பராமரிப்பது நல்லது.

சர்க்கரை நோய் பாதிப்பை அறிய, சர்க்கரையின் அளவை அடிக்கடி பரிசோதிக்க வேண்டும். மருத்துவரின் ஆலோசனையைப் பெற்றே உணவுகள் உட்கொள்ள வேண்டும்.

தினமும் இரவு உறங்கச் செல்லும் முன்பு, வெந்நீரால் கால்களைக் கழுவ வேண்டும்.

கால்கள் வறண்டு போகாமல் இருக்க, மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று லோஷன், கிரீம் பயன்படுத்துவது நல்லது.

கால் விரலின் நகங்களை வளர விடாமல் மிகவும் கவனமாக வெட்டி விட வேண்டும்.

நகத்தை வெட்டும் போது சதையை வெட்டிவிட்டால், அது புண்ணாகி பிரச்சனையை ஏற்படுத்தும்.

காலின் அளவுக்கு ஏற்ற காலணிகளை தேர்வு செய்து அணிவதோடு, கால் நகங்களைப் பாதுகாக்க லெதரால் செய்யப்பட்ட ஷூ-சாக்ஸ்களை பயன்படுத்த வேண்டும்.

காலில் ரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டியது மிக முக்கியம். எனவே, உட்காரும்போது கால்களை நீட்டி உட்கார வேண்டும்.

அதனுடன் கால்களில் உணர்ச்சிகள் இருக்கிறதா என்பதையும், காலில் அடிபட்டிருக்கிறதா, புண், காயங்கள், சிராய்ப்புகள் ஏற்பட்டுள்ளதா என்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

Sharing is caring!