திருமணமான பெண்களின் கவனத்திற்கு!

திருமணமான பெண்கள் செய்யக்கூடிய ஒருசில விஷயங்கள் அவர்களின் வாழ்க்கைக்கு துரதிஷ்டங்களை ஏற்படுத்துகிறது.

எனவே அவர்கள் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டிய வாஸ்து இரகசியங்கள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

வளையல் பெட்டியில் உடைந்த வளையல்கள் இருந்தால் உடனே அதை அகற்றிவிடுங்கள்.அப்படியே வைத்திருத்தல் கூடாது.
பெண்களுக்கு திருமண புடவை என்பது முக்கியமான ஒன்று. அந்த திருமண புடவையில் சிறு கீறலும் விழாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அப்படி நேர்ந்தால் அது கெட்ட சகுனம் என்று சாஸ்திரம் கூறுகிறது.
முடிந்த அளவுக்கு திருமணமான பெண்கள் அடிக்கடி மருதாணி போட்டுக்கொள்ளுங்கள். இது கணவன் மனைவிக்கு இடையேயான பந்தத்தை அதிகப்படுத்தும்.
நீங்கள் உபயோகித்த பொட்டை மற்றவர்களுக்கு தரக்கூடாது. அவ்வாறு செய்தால் உங்களின் அதிர்ஷ்டத்தை நீங்களே இழந்ததிற்கு சமம்.
உங்களின் திருமண நகைகளை மற்றவர்களுக்கு எக்காரணம் கொண்டும் இரவலாக கொடுக்கக்கூடாது.
தங்கம் என்பது லட்சுமி தாயாரின் உருவமாக கருதப்படுகிறது. ஆகவே தங்கத்தை காலில் அணிந்தால் லட்சுமி தாயாரின் கோவத்திற்கு ஆளாவீர்கள். மேலும் இது லட்சுமி தாயாரை அவமதித்ததற்கு சமம்.
பெண்கள் தாங்கள் பயன்படுத்தும் அலங்கார பொருட்களை பூஜைக்கு பயன்படுத்துவார்கள். இவ்வாறு செய்யக்கூடாது.
காலியான அலங்கார பொருட்களை தூக்கி வீசவும் கூடாது.உங்களின் தோட்டத்தில் அல்லது பூஜை அறையில் அதை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள்.
வைரம் உங்களுக்கு பொருத்தமானதா இல்லையா என்பதை அறிந்தே நீங்கள் வைரத்தை வாங்கவேண்டும். ஒவ்வொரு உலோகமும் ஒருவித ஆற்றலை வெளிப்படுத்தும்.

Sharing is caring!