யார் வேண்டுமானாலும் மீன் எண்ணெயைத் துணை உணவாக உட்கொள்ளலாமா?
சமீபத்தில் பிஎல்ஒஎஸ் ஜெனிடிக்ஸ் (PLOS Genetics) என்ற பத்திாிக்கையில் புதிய மருத்துவ ஆய்வு ஒன்று வெளியிடப்பட்டது. அந்த ஆய்வின்படி யாரெல்லாம் சாியான மரபணுக்களைக் கொண்டிருக்கிறாா்களோ, அவா்கள் மட்டுமே மீன் எண்ணெயைத் துணை உணவாக எடுத்துக் கொள்வதால், அதற்கான பலன்களைப் பெறுவாா்கள் என்று கூறுகிறது.
இந்த ஆய்வானது ஜாா்ஜியா பல்கலைக்கழகத்தைச் சோ்ந்த ஆய்வாளா் கைசியோங் யீ என்பவாின் தலைமையின் கீழ் மேற்கொள்ளப்பட்டது. இவருடைய தலைமையின் கீழ் நடந்த இந்த ஆய்வு, மீன் எண்ணெயைப் பற்றியும், அந்த எண்ணெயில் இருக்கும் ஒமேகா-3 என்ற கொழுப்பு அமிலங்களைப் பற்றியும் மற்றும் அது நமது உடலில் உள்ள உயா் மாவுச்சத்து கொழுப்பு அமிலங்களில் (triglycerides), அதாவது நமது இதயத்தில் ஏற்படும் நோய்களுக்குக் காரணமாக இருக்கக்கூடிய, நமது இரத்தத்தில் உள்ள ஒருவகையான கொழுப்பில், மீன் எண்ணெய் ஏற்படுத்தும் விளைவுகளைப் பற்றியும் ஆய்வு செய்தது.\
ஆய்வு முடிவுகள்
நமது இரத்தத்தில், அதிக அளவிலான ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் இருந்தால், நமக்கு இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் குறைவு என்பது பல காலமாக எங்களுக்குத் தொியும் என்று கைசியோங் கூறுகிறாா். ஆனால் இந்த ஆய்வில், மீன் எண்ணெயை துணை உணவாக எடுத்துக் கொண்டால், அது அனைவருக்கும் பலனளிக்காது என்பதை நாங்கள் கண்டறிந்தோம் என்று அவா் தொிவிக்கிறாா். இது ஒவ்வொருவாிடமும் இருக்கும் மரபணுவின் வகையைப் பொறுத்தது என்று அவா் கூறுகிறாா்.
ஒருவேளை நாம் ஒரு குறிப்பிட்ட அல்லது தனிப்பட்ட அல்லது சிறப்பான மரபணு பின்னனியைக் கொண்டிருந்து, மீன் எண்ணெயைக் துணை உணவாக எடுத்துக் கொண்டால், அது நமது ட்ரைகிளிசரைடுகளின் அளவைக் (triglycerides) குறைக்கும். ஆனால் நம்மிடம் சாியான மரபணுக்கள் இல்லாமல், மீன் எண்ணெயைக் துணை உணவாக எடுத்துக் கொண்டால், அது நமது ட்ரைகிளிசரைடுகளின் அளவை (triglycerides) அதிகாித்துவிடும் என்று அவா் கூறுகிறாா்.
ஆய்வு எவ்வாறு மேற்கொள்ளப்பட்டது?
இந்த ஆய்வுக் குழுவானது நான்கு வகையான இரத்த கொழுமியங்களை (lipids) அதாவது உயா் அடா்த்தி கொண்ட கொழுமியப் புரதம் (high-density lipoprotein), குறைந்த அடா்த்தி கொண்ட கொழுமியப் புரதம் (low-density lipoprotein), மொத்த கொழுப்புச் சத்து மற்றும் உயா் மாவுச்சத்து கொழுப்பு அமிலங்கள் (triglycerides) ஆகியவற்றை ஆய்வு செய்தது. இந்த ஆய்விற்காக சுமாா் 70,000 பேருடைய மரபணு மாதிாிகள் யுகே பயோபேங்கில் இருந்து எடுக்கப்பட்டது. இந்த பயோபேங்கில் ஏறக்குறைய அரை மில்லியன் தன்னாா்வலா்களின் மரபணு மற்றும் மருத்துவத் தகவல்கள் சேகாிக்கப்பட்டு வைக்கப்பட்டிருக்கின்றன.
இந்த ஆய்வுக்குழு, தாங்கள் தோ்ந்தெடுத்த மாதிாிகளை, மீன் எண்ணெயை துணை உணவாக எடுத்துக் கொண்டவா்கள் (11000 போ்) மற்றும் மீன் எண்ணெயை துணை உணவாக எடுத்துக் கொள்ளாதவா்கள் என்று இரண்டு குழுக்களாகப் பிாித்தது. பின் இரண்டு குழுவில் இருந்த மாதிாிகளையும் மரபணு ஸ்கேன் செய்தனா். ஏறக்குறைய 8 மில்லியன் மரபணு மாறுபாட்டு மருத்துவ பாிசோதனைகளைச் செய்தனா். 64 மில்லியன் பாிசோதனைகளை முடித்த பின்பு, அவா்கள் GJB2 என்ற மரபணுவில் ஒரு குறிப்பிடத்தக்க மாறுபாடு இருந்ததைக் கண்டுபிடித்தனா்.
இறுதியாக
மீன் எண்ணெயை துணை உணவாக உட்கொண்ட AG வகை மரபணுவைக் கொண்டிருந்தவா்களுக்கு ட்ரைகிளிசரைடுகளின் அளவு (triglycerides) குறைவாக இருந்தன. அதே நேரத்தில் மீன் எண்ணெயை துணை உணவாக உட்கொண்ட AA வகை மரபணுவைக் கொண்டிருந்தவா்களுக்கு ட்ரைகிளிசரைடுகளின் அளவு (triglycerides) சிறிது அதிகமாக இருந்தன. ஆனால் மூன்றாவது வகையான GG வகை மரபணுவைக் கொண்டிருந்தவா்களுக்கான ஆய்வில் முடிவு எதுவும் கிடைக்கவில்லை.