வெயிலில் இந்த குளிர்பானங்களை குடிக்காதீர்கள்.. புற்றுநோயே வரக்கூடுமாம்!

கோடைக்காலம் ஆரம்பித்து விட்டாலே பல சரும நோய்களை சந்திக்க நேரிடும். இதனால் வெயிலுக்கு இதமாக நாம் அனைவரும் குளிர்பானங்களை பருக தொடங்கிவிடுவோம்.

ஆனால், கார்பனேற்றம் செய்யப்பட்ட அந்த குளிர் பானங்களை குடிக்கும் போது உடலும் மனமும் குளிர்வதாக உணர்வோம். ஆனால் அவற்றில் நன்மைகளை விட தீமைகளே அதிகம் உள்ளன.

சோடா போன்ற பானங்களை குடிப்பதால் உடலில் கெட்ட கொழுப்பு சேர்த்து உடல் பருமன் அதிகரிக்கிறது.

மேலும், குளிர்பானங்களில் திரவ சர்க்கரையின் அளவு அதிகமாக உள்ளது. நமது உடலில் உணவு உண்பதால் சேரும் சர்க்கரையின் அளவை விட சோடாபோன்ற குளிர்பானங்கள் குடிப்பதால் சேரும் சர்க்கரையின் அளவு அதிகமாகிறது.

குளிர்பானம் குடிப்பவர்களுக்கு இரண்டு மடங்கு அதிகமாக உடல் எடை அதிகரிக்கிறது. சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் சோமா போன்ற பானங்களை அதிகம் பருகுவதால் குழந்தைகள் 60 சதவீதம் அதிக உடல் பருமனுடன் காணப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

கார்பனேற்றம் செய்யப்பட்ட குளிர்பானங்களில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் எதுவுமில்லை.

இதுமட்டுமின்றி, சோடா போன்ற குளிர்பானங்களை அதிக அளவில் குடிக்கும் நபர்களுக்கு மற்றவர்களை காட்டிலும் கணையப்புற்றுநோய் உருவாகும்வாய்ப்பு 87 சதவீதம் அதிகம் இருப்பதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.

இந்த பாதிப்பு ஆண்களை விட பெண்களுக்கு அதிகமாக உள்ளது. மேலும் பெருங்குடல் மற்றும் கருப்பை புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகம் உள்ளன.

எனவே ஆபத்து தரும் இந்த குளிர்பானங்களை தவிர்த்துவிட்டு பழங்கள், இளநீர், மோர், பதநீர் போன்றவற்றை குடித்து நலமுடன் வாழுங்கள்…

Sharing is caring!