உங்கள் வீட்டில் கரப்பான் பூச்சி தொல்லையா?

சமையலறையில் அழையா விருந்தாளியாக வந்து தொல்லை கொடுப்பது என்றால் அது கரப்பான் பூச்சி.

பெரும்பாலான பெண்களுக்கு கரப்பான் பூச்சி என்றாலே பயம், இந்த கரப்பான் பூச்சி தொல்லையிலிருந்து விடுபட சில டிப்ஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

சர்க்கரை மற்றும் பேக்கிங் சோடாவை ஒன்றாக கலந்து, கரப்பான் பூச்சி வரும் இடத்தில் தூவ வேண்டும், இப்படி செய்தால் கரப்பான் பூச்சி அந்த இனிப்பை உட்கொண்டு இறந்துவிடும்.
பிரியாணி இலையை பொடி செய்து கரப்பான் பூச்சி வரும் இடத்தில் தூவினாலும் நறுமணத்திற்காக கரப்பான் பூச்சி வராது.
இதேபோன்று கிராம்பை வைத்தாலும் கரப்பான் பூச்சி வராது.
வெங்காய மற்றும் பூண்டு பேஸ்டுடன் மிளகுத் தூள் கலந்து நீர்மம் போல தயாரிக்க வேண்டும், இதனை தெளித்தாலும் கரப்பான் பூச்சிகள் அண்டாது.

Sharing is caring!