
யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வதிவிடமாகவும் கொண்ட சேதுப்பிள்ளை விஜயரத்தினம் அவர்கள் 06-06-2018 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை தெய்வானை தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு ஐயாத்தைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும், அனலைதீவைச் சேர்ந்த கார்த்திகேசு விஜயரத்தினம்(முன்னாள் வர்த்தகர் குளியாப்பிட்டி சிலாபம்- கனடா) அவர்களின் அன்பு மனைவியும், அருணன்(Mr. Digital Photo Lab), பிரபாகரன், மனோகரன், விஜயா, பாஸ்கரன் ஆகியோரின் அன்புத் தாயாரும், காலஞ்சென்றவர்களான கதிரவேலு, விசாலாட்சி, சண்முகம், தையலம்மை, வேலாயுதம், சரஸ்வதி ஆகியோரின் பாசமிகு சகோதரியும், மனோகரி, ஜெனிவ், யாழினி, மோகனகுமார், மைத்திரேயி ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, ஞானாமிர்தம், தனலட்சுமி மற்றும் சபாரெத்தினம்(கனடா), Dr. பழனிவேல்(லண்டன்), கமலாசினி(கனடா), நடேசன்(கனடா), லீலாவதி(கனடா), விமலாம்பிகை(கனடா), ரெத்தினசிங்கம்(ஜெர்மனி), கேசவராஜா(கனடா), காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, சின்னத்தம்பி, சரவணமுத்து மற்றும் கண்மணி(கனடா), சிவப்பிரகாசம்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும், அர்ச்சனா- உதயபாலன், கீர்த்தனா, சோபியா, அஞ்சலீனா, சீதா, சிவான், ஹரிகரன், பிரணவி, பிரஷான், கோபிகா, மிதுலா, சுவேதா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
தகவல் |
குடும்பத்தினர் |