உயிர்ப்பு

இலைகளை எரித்தது வெயில்.
நிமிர்ந்துநின்ற
கிளைகளை முறித்தது
கிளம்பிவந்த பேய்க்காற்று.
பூக்களைச் சபித்து
மொட்டுதிர்த்தது குளிர்மை.
வேர்களை அழுகவைத்து வீழ்த்திற்று
மழைவெள்ளம்.
எல்லாம் முடிந்ததென
எல்லாமும் மோனிக்க
“இல்லை முடிவென்று” என்றோ உதிர்ந்திருந்த
வித்துகளை… ‘உறக்க நிலை’களைந்து
முளைக்கவைத்து
வெற்றிடங்கள் ஏற்படாது,
சமநிலை குலைந்திடாது,
புத்துயிர்ப்பைத் தூண்டிவிட்டுப்
போயிற்றடா காலம்!
செத்து சிதறி சிதைந்து
இறுகி ஓய்ந்த
அத்தனை மனங்களிலும் ஊமையான
சுதந்திரத்தின்
சொற்களை உயிர்க்கவைத்து
துள்ளவைக்கும் என்கவிதை!

நன்றி கவிஞர் த.ஜெயசீலன்

Sharing is caring!