ஓயாத வாழ்க்கை!

ஓயாது அலையடிக்கும் உலராத கடல்,
நித்தம்
ஓயாது கோலமிடும்
ஒய்யார முகிலினங்கள்,
ஓயா இயற்கையின் உயிர்மூச்சாய் காற்று,
அதன்
ஓயாத ஈரலிப்பாய் உருகும் பனிக்குளுமை,
ஓயா தழிந்தும் உயிர்க்கும் ‘உயிர்க்கோளம்’
ஓயாது வந்துபோகும் ஒளிமுதல்வன்,
அவன்பின்னே
ஓர் கணமும் நின்று
ஓய்வெடுக்காப் பூமி,
ஓர் கணமும் ஓயா தொளிரும்
எழிற் திசைகள்,
ஓர் நொடியும் ஓயாது உலவுகிற காலம்,
ஓர்நொடியும் ஓய்ந்து உறங்கா
உணர்வுகள்,
ஓர்பொழுதும் ஓய்ந்து உதிரா
நினைவுகள்,
ஓர் பொழுதும் ஓயாது துளிர்க்கும்
கவிதைகள்,
நாளை இருக்கென்று நம்பி…
இன்றால் களைத்தும்
ஓயாது, இடையறாது, ஒரு தொடர்ச்சி
யோடியங்கிக்
கூர்ப்படையும் வாழ்க்கை; கொடி
ஏற்றட்டும் உன் வார்த்தை!

நன்றி கவிஞர்.த.ஜெயசீலன்

Sharing is caring!