காலத்தோடு ஓடல்

நிற்காமல் ஓடுது பார் காலம் –நீ
நின்றால் என்னாகும் உன் கோலம்?
கற்றுக்கொள் ஓடுகிற வேகம் –உன் 
கால்களுக்கும் ஊட்டு தினம் தாகம்.

காலம் ஓர் பயணி…நிதம் போகும் –எதும்
களைப்போய்வு இல்லாது…நாளும்!
நாம் போவோம் அதில் தொற்றி யேனும் –அது
நமை இழுத்துப் போகாது….தேறும்!

காலத்தின் வேகத்திற் கீடாய் –நாமும்
கதிகொள்ள வேணும் காண் சீராய்!
ஆறி…உன் பாட்டில் நீ போனால் –நீ
ஆகிடுவாய் பழங்கஞ்சி…தானாய்!

காலத்தை சக பயணி ஆக்கு –அதன்
கை கோர்த்து உனை நிதமும் மாற்று!
காலத்தின் கதிக்கருகில் ஓடு –அது
கரை சேர்க்கும்…உனை வெல்ல யாரு?

நன்றி – கவிஞர் த.ஜெயசீலன்

Sharing is caring!